pechi revews
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. இதில் பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு : பார்த்திபன், படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின், கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ப்ரீத்தி நெடுமாறன், இணை தயாரிப்பு : விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்,மக்கள் தொடர்பு : சுரேஷ், தர்மா : ட்ரெக்கிங்’ செல்வதற்காகக் அடர்ந்த கொல்லிமலை காட்டிற்கு வருகிறார்கள் ஐந்து இளம் ஆண்,பெண் .மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஸ்வரன்), மற்றும் சேது (ஜனா) நண்பர்கள் மற்றும் இவர்களுடன் மாரி (பாலசரவணன்) உள்ளூர்காரர் காட்டுக்குள் செல்லும் பாதையை நன்கு அறிந்தவர...