புஜ்ஜி அட் அனுப்பட்டி’. திரைவிமர்சனம்
ராம் கந்தசாமி கதை எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழிலநுட்ப கலைஞர்கள் :இசை : கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு : அருண் மொழி சோழன், எடிட்டிங் : சரவணன் மாதேஸ்வரன், மக்கள் தொடர்பு சக்திசரவணன்
போக்குவரத்து இல்லாத கிரமத்தில் வசிக்கும் முருகேசன் சித்ரா தம்பதியர்களுக்கு இரு குழந்தைகள் சரவணன் ,துர்கா இவர்கள் இருவரும் ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும் போது ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி அனாதையா நின்று கொண்டு முள் செடியில் சத்தமிட்டு கொண்டிருந்தது இதை இருவரும் பார்க்கிறார்கள். அந்த குட்டியை தன் வீட்டிற்கு தூக்கி கொண்டு வந்து விடுகிறார்கள் வீட்டில் துர்கா அம்மா ஏய் இது யார் வீட்டு குட்டி கேட்க நடந்ததை இரு குழந்தைகளும் தாய்யிடம் சொல்கிறார்கள் சரி ஆட்டுகுட்டி சொந்தகாரர் வந்தால் கொடுத்திடலாம் அம்மா கூற துர்கா அந்த ஆட்டுக் குட்டிக்கு ‘புஜ்ஜி’ என்ற பெயர் வைத்து அன்புடன் வளர்க்கிறாள்.ஒரு நாள் ஆட்டுக்குட்டிக்கு சொந்தக்காரன் வந்து ஆட்டுக் குட்டியை எடுத்துக்கொண்டு போய்விடுகிறான் இது தெரிந்த துர்கா சாப்பிடாம அழுது கொண்டே இருக்கிறது யார் சமாதானம் சொன்னாலும் அந்த குழந்தை அழுகை நிறுத்தவில்லை அதே ஊரில் வசிக்கும் பண்ணைக்காரர் சிவா இந்த இரு குழந்தைகள் மீதும் பாசம் உள்ளவர் துர்கா மீண்டும் பழைய நிலைமைக்கு வர ஒரே வழி ஆட்டுகுட்டியை மீண்டும் துர்காவிடம் சேர்த்துடனும் என்ற எண்ணத்தில் ஆட்டுக்குட்டியின் . சொந்தக்காரர் தேடிச் செல்கிறார் ஆட்டுக்குட்டி சொந்தக்காரர்யிடம் அந்த குட்டிக்கு உரிய பணத்தை கொடுத்து ஆட்டுக்குட்டி எடுத்து வருகிறார் துர்காவிடம் கொடுக்கிறார் துர்காவிற்க்கு பெரிய சந்தோஷம்
துர்காவின் அப்பா முருகேசன் ஒரு பெருங்குடிக்காரன் ஒரு நாள் குடிப்பதற்கு பணம் இல்லையென்றதால் அந்த ஆட்டுக்குட்டி கொண்டு போய் சாராயக்கடையில் குடிக்க வந்தவர்களிடம் விற்று குடித்து விடுகிறான்.இப்போது விற்ற (விற்பனையான) புஜ்ஜி ஆட்டுக்குட்டியை தேடி அண்ணனும் தங்கையும் யாரிடம் சொல்லாமல் தன்னந்தனியாக ஊர் ஊராக தேடுகிறார்கள் அலைகிறார்கள் போகிறார் கடைசியில் அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா? இல்லையா?.. மீதி கதை...
சிறுமி துர்காவாக வரும் மற்றும் அவளது பிரியமான ஆடு புஜ்ஜி_யின் குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம் பிரிணதி, அற்புதமாக நடித்து இருக்கிறார். வழியில் கிடைத்த கருப்பு ஆட்டுகுட்டியைக்கும் கிடை குழந்தையின் முகத்தில் சிரிப்பு சந்தோஷம் “ ஆடு காணவில்லை என்றதும் அழுது துடிப்பது, “அய்யோ.. ஆட்டை வெட்டிட்டாங்களா” என கேட்டு பதைபதைப்பது… பார்ப்பவர்சிகளின் கண்ணுக்குள்ளே அந்த காட்சி நிற்கிறது ...சிறப்பான நடிப்பு.
அவரது அண்ணனாக வரும் சரவணன் ( கார்த்திக் விஜயும்) சிறப்பாக நடித்து உள்ளார். ஆரம்பத்தில் ஆட்டுக்கறியை எச்சில் ஊற பார்ப்பது… ஒரு கிலோ , “கறி ஒரே மூட்ட சாப்பிட்டுவான் , தங்கையை அழைத்துக்கொண்டு ஆட்டை த் தேடி அலைந்து திரிவது பயணிப்பது… இந்த சிறுவனுக்கும் பாராட்டுகள்.
துர்கா - வின் அப்பா, அம்மா, பண்ணைக்காரர் சிவா மற்றும் ஊர்காரர்கள் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளனர்
படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவு , பின்னனிஇசை, எடிட்டிங் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் குழந்தை முழுக்க நல்ல கதையம்சம் கொண்ட 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' திரைப்படம் பார்வையாளர்களை,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் இப்படம் ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கு மற்றும் செல்ல பிராணிகளை வளர்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.