pechi revews

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’.

இதில் பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு : பார்த்திபன், படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின், கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ப்ரீத்தி நெடுமாறன், இணை தயாரிப்பு : விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்,மக்கள் தொடர்பு : சுரேஷ், தர்மா

 : 

 ட்ரெக்கிங்’ செல்வதற்காகக் அடர்ந்த கொல்லிமலை காட்டிற்கு  வருகிறார்கள் ஐந்து இளம் ஆண்,பெண்  .மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஸ்வரன்), மற்றும் சேது (ஜனா) நண்பர்கள் மற்றும் இவர்களுடன் மாரி (பாலசரவணன்) உள்ளூர்காரர் காட்டுக்குள்  செல்லும் பாதையை நன்கு அறிந்தவர் காட்டுக்குள்  மிருகங்கள் நடமாட்டத்தை  தெரிந்தவர் இவர் பார்க்க வேண்டிய இடம் பார்க்க கூடாத இடம் தடைசெய்பட்ட பகுதி  என்கிற எச்சரிக்கையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். அது  சிலருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட இருவர்,  பேச்சைக் கேட்காமல்  தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகிறார்கள் அங்கு பழைய  ஒரு வீட்டை பார்க்கிறார்கள்  வீட்டுக்குள்  நுழைந்தவர்கள் மிரண்டு பயந்து ஓடி வருகிறார்கள் இவர்களுடன் வந்தவர்கள் சிலபேர் காணவில்லை  இதற்குப் பின் என்ன நடக்கிறது, அந்தக் காட்டுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தி என்ன ? அந்த வீட்டுக்குள் எதை பார்த்தார்கள்? இவர்கள் உயிருடன் காட்டைவிட்டு வெளியேறினார்களா, இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே 'பேச்சி' படத்தின் மீதி கதை.

பால சரவணனும், காயத்ரியும் நாம் எதிர்பார்க்காத அளவில் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்கள். 

ஐந்து பேர் கும்பலில் ஒருவர்  கேமேர வைத்து படம் வீடியோ எடுக்கும் மகேஷை மற்ற இருவர், அளவுக்கு மீறிக் கிண்டல் செய்வது எரிச்சல் லாக இருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது இதில் நடித்த அனைவரும் சிறப்பாக தன் கதாபாத்திரத்தை செய்துள்ளனர்

பேச்சியாக வரும் கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தது.

இயக்கம் :

காட்டில் மாட்டிக்கொண்ட இளைஞர்களும் அங்கு உள்ள தீயசக்தி (அமானுஷ்யத்தை) வைத்து மையமாக கதையை இயக்கியுள்ளார் ராமச்சந்திரன். படம் ஆரம்பித்து இடைவேளை சற்று முன் கதை சூடு பிடித்தது  பல படங்கள்  பேய் அமானுஷ்யத்தையும் சஸ்பன்ஸ் , திரில்லர் பற்றி படங்கள் வந்திருந்திலாலும் இப்படத்தில் காட்சிகள் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருந்தது

ஒளிப்பதிவு :

பார்த்திபன் காட்டின் அழக  அப்படியே அள்ளி கொடுக்கிறார்  நம்மையும்  காட்டுக்குள் அழைத்து செல்வதாக இருந்தது -படத்திற்க்கு  பிளஸ்ஸாக இருந்தது

இசை

 பின்னணி இசை:ராஜேஷ் முருகேசன்   படத்திற்கு கூடுதல் பலம்.படத்தின் திகில் காட்சிகளில் நம்மை மிரள வைத்துயிருக்கிறார் 

எடிட்டர்: :தேவையான கட்சிகள் மட்டும் சத்துள்ளார் ... மற்றும் இதில் பணியாற்றி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பான தன்பணியை செய்துள்ளனர்

இப்படம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியாக இருந்தது. 


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்