"ஹிட் லிஸ்ட் "திரைவிமர்சனம்

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்.

இதில் சரத்குமார், விஜய் கனிஷ்கா (அறிமுகம்), ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இணைத்தயாரிப்பு : ஆர்.ஜி.சி-ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ், இசை : சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ராம்சரண், படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ், கலை : அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே, ஆடைகள் : வி.மூர்த்தி, ஒப்பனை : கோதண்டபாணி, படங்கள் : விஜய்,விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக், தயாரிப்பு நிர்வாகி : ஜே.வி.பாரதி ராஜா, மக்கள் தொடர்பு : ரியாஸ்.கே.அஹ்மத்

குடும்ப உறவுகளின் ஒற்றுமையும் கூட்டு வாழ்க்கை தத்துவத்தை குடும்ப நன்மை  என பாசிட்டிவான சிந்தனைகளை தன் படத்தில் சொன்னவர் மக்களிடம் பேரண்பு பெற்றவர். பூ வே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப் போல படங்கள் இன்னமும் ரசிகர்களால் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கப்படுகிறது வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்த விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை தற்போது ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

 தன் மகன் விஜய் கனிஷ்காவை, ஹிட் லிஸ்ட் படத்தில் சூரிய கதிர், கார்த்திகேயன் என்ற  இயக்குநர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த படத்தை ஆரம்ப நாட்களில் விக்கிரமனிடம் உதவியாளராக கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். தன் குரு விக்ரமனுக்குச் செய்யும் கடமையாகவும்,  நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தாக இந்த படத் தயாரிப்பைப் பார்ப்பதாகச் சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த ஹிட் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள், கதை என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.

வள்ளலாரை பின்பற்றி எந்த உயிருக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்று வாழ்ந்து வருபவர் படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா  விஜய் கனிஷ்கா ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். அப்பா இல்லாத சூழலில் அம்மா, தங்கையுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் கனிஷ்கா, நிகழ்ச்சி ஒன்றில் ACP அதிகாரியான சரத்குமாருடன் அறிமுகமாகிறார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் விஜய் கனிஷ்காவுக்கு போன் . செய்யும் மர்ம நபர், அவரின் அம்மா, தங்கையை கடத்தி வைத்திருப்பதாக கூறி மிரட்டுகிறார்.

உடனே சரத்குமாரிடம் அதனை விஜய் கனிஷ்கா கூற, பின்னர் எப்படி அவர் தனது குடும்பத்தை காப்பாற்றினார்? கடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

விறுவிறுப்பான திரைக்கதையாக ஹிட் லிஸ்ட் நம்மை ஈர்க்கிறது.  ஆரம்பிக்கும் முதல் கதை இறுதிவரை பரபரப்பாகவே நகர்கிறது. கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார், சண்டைக்காட்சி மிரட்டியிருக்கிறார்  

ஹீரோ விஜய் கனிஷ்கா சாதுவான  இளைஞர் வேடத்திற்கு சரியாக பொருந்துகிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் நம்பவைக்க முயற்சித்திருக்கிறார் அடுத்தடுத்தப் படங்களில் காதல், ரொமான்ஸ் என்று வித்தியாசம் காட்டி படங்களில் நடிக்க வேண்டும்  வாழ்த்துக்கள் இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது. 

மருத்துவமனையில் டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், எப்போதும் போல் தனது  நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஸ்மிருதி வெங்கட், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர் 

ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்

முழுக்க முழுக்க கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். அதனால் தான் படம் கவனிக்க வைக்கிறது மர்ம னிதன் யார், அவன் எதற்காக விஜய் கனிஷ்காவை கொலைகாரனாக பயன்படுத்துகிறார் ஆகிய இரண்டு கேள்விகள் தான் அதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸாக வைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் பாராட்டுகள்.

சஸ்பென்ஸ் ,த்ரில்லராக மட்டுமின்றி அடுத்தடுத்தப் காட்சிகளை வித்தியாசத்தையும்  க்ளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத சொன்ன வகையில் அனைவரையும் கவர்கிறது ஹிட் லிஸ்ட்.


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்