ரயில் விமர்சனம்
டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரித்திருக்கும் ரயில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சக்தி.
ஹீரோ.. முத்தையா – குங்குமராஜ் முத்துசாமி, ஹீரோயின்:செல்லமா – வைரமாலா. வடமாநில சுனில் – பர்வேஸ் மெஹ்ரூ, வரதன் – ரமேஷ்வைத்யா, ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை, சுனில் மனைவி டிம்பிள் – ஷமீரா, சுனில் அப்பா – பிண்ட்டூ, சுனில் அம்மா – வந்தனா, குழந்தை – பேபி தனிஷா, திருப்புளி – சுபாஷ், இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு,மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா, அக்கவுண்டண்ட் – சாம் டேனியல், சுனில் சூஃப்ரெண்ட் – ராஜேஷ், கான்ஸ்டபிள் – ராமையா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு : நாகூரான், இராமச்சந்திரன், இசை : எஸ்.ஜே.ஜனனி, சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன், பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா, மேனேஜர் – உசிலை சிவா, மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
வடமாநில தொழிலாளர் வேலைக்காக தமிழ்நாட்டில் சென்னை சென்டரல் ரயில் மூலம் தினம் வருகை அதிகம் .அவர்கள் பிரிந்து பல மாவட்டங்களில் சென்று தொழிற்சாலை, கட்டிட பணிகள், பெரிய வணிகவளாகம் மற்றும் அவர்கள் இல்லாத இடமே இல்லை அனைத்து இடங்களிலும் ஊடுருவியுள்ளனர் . அந்த வகையில் ஒரு கதாபாத்திரம் சுனில் வட மாநில தொழிலாளர் அவரையும் படத்தின் கதாநாயகன் நம்ம ஊரு மண் சார்ந்த படத்தின் ஹீரோ கைத்தொழில் வேலை தெரிஞ்சும் குடிகாரன் குடியினால் வேலைக்கு போகாமல் ஊர் தெரியும் கதாநாயகன் இவர்கள் இருவரை பற்றி இப்படம் பேசப்படுகிறது .
படத்தை பார்ப்போம்:
நம்ம ஹீரோவுக்கு எப்போதும் குடி, குடிதான். மனைவி சொல்லி பார்த்தும் திருந்தவில்லை மனைவி தங்க நகைகள் விற்று தின்னுட்டான் வட மாநிலத்திலிருந்து வேலைக்கு வரும் ஒரு இளைஞன் ஹீரோ வீட்டு அருகில் வாடகைக்கு குடியிருக்கிறன் இந்தப் பையனும், ஹீரோவின் மனைவியும் அக்கா - தம்பி போல் பழகுகிறார்கள். இருந்தாலும் எப்போதும் போதையில் இருக்கும் ஹீரோ, இவர்களை சந்தேகக் கண்ணோட்டத்தின் பார்க்கிறார். எதிர்பாராத விதமாக வட இந்திய இளைஞன் விபத்து ஒன்றில் பலியாகிறான் அந்த வட மாநில இளைஞன் சேமித்து வைத்த ரூ 6 லட்சம் .பணம் காணாமல் போகிறது. இந்தப் பணத்தை நம்ம ஹீரோதான் திருடி இருப்பார் என்று எண்ணுகிறார் மனைவி பலவித கோணங்களில் கணவரிடம் விசாரிக்கிறார் எந்த விதத்திலும் கணவர் எடுக்கவில்லை என்று ஊர் கோயில் சத்தியம் செய்கிறான் இந்தப் பணம் மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
குடிப்பழக்கத்தால் ஹீரோ பொறுப்பில்லாமல் சரிவர வேலைக்கு செல்வதில்லை குடும்பத்தில் மன ரீதியான பிரச்சனை சொல்லும் படமாக தந்திருகிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. மேலும், வடமாநில தொழிலாளர்களின் உழைப்பு அவர்கள் தன் குடும்பத்தின் மீது வைத்துள்ள பாசம் அக்கறை சொல்லி இருக்கிறார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகரும் கதைகளம் நம் மனதை தொடும் சில காட்சிகள் உள்ளது.
ஹீரோ குங்குமராஜா நம்மூர் குடிமகன்கள் செய்யும் அலப்பறைகளை கண்முன்னே காட்டி விடுகிறார். வட மாநில கதாபாத்திரம் சுனில் நடிப்பு அவருடைய பேச்சும். இரவில் ஹிந்திபாட்டு / தமிழ் பாட்டு பாடுவது ஹீரோவிடம் Sorry கேட்பது ரசிக்கும்படியாக இருந்தது கண் முன்னே நிற்கிறது , ஹீரோயின் :செல்லமா – வைரமாலா பிரமாதமாக நடித்திருக்கிறார் . படம் முழுவதும் நடிப்பில் ஆளுமை செலுத்துவது இவர்தான். குடிகார கணவனுடன் போராடும் நம்மூர் பெண்களை கண் முன்னே காட்டி இவர் நடிப்பு எல்லோரின் மனசிலும் இடம் பிடித்து விட்டார் வைரமாலா படத்தில் அதிகம் ஜொலிக்கிறார். ஹீரோயின் அப்பாவாக – செந்தில் கோச்சடை, மகள் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் அப்பாவாக நடித்திருக்கிறார் பாராட்டுகளும் பெறுவார். மற்றும் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு : நாகூரான், இராமச்சந்திரன், இசை :எஸ்.ஜே.ஜனனி, படத்தொகுப்பு : நாகூரான், மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள்
இப்படம் வடமாநில தொழிலாளர்கள் அவர்கள் மீது நாம் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டை உடைத்து எரிகிறது நியபடுத்துகிறது தமிழ்நாட்டின் இளைஞர்கள் குடியினால் சரிவர வேலைக்கு போகாமல் இவர்களே வடமாநில தொழிலாளர்களுக்கு வேலைக்கு வழி விடுகிறார்கள்.
இப்படம் தமிழ்நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையும் வந்தவர்களை வாழ்வைக்கும் தமிழகம் உள்ளது .
அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.
எமோஷனல் ட்ராமாவாக மாறுகிறது. கதையின் நகர்வில் தடுமாற்றம்
"
எமோஷனல் ட்ராமாவாக மாறுகிறது. கதையின் நகர்வில் ஒரு கோர்வை இல்லாமல் தடுமாறுகிறது