ராயன் திரைப்பட விமர்சனம்.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் ராயன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ்.

இதில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ்,செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார்,சரவணன்,திலீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : ஏ. ஆர். ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், படத்தொகுப்பு : பிரசன்னா, நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி, பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு, ஆடை வடிவமைப்பாளர் :  காவ்யா ஸ்ரீராம், சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன், ஒப்பனை : பி. ராஜா, படங்கள் : தேனி முருகன்,விளம்பரம் : சிவம் சி. கபிலன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார் , நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது.

கிராமத்தில் சிறு வயதில்   காத்தவராயன் (தனுஷ்), தன் தம்பிகள் முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷண்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்), தங்கை துர்கா கை குழந்தை (துஷாராவிஜயன்) வெளி ஊர் சென்ற  பெற்றோர்கள் வீடு திரும்பவில்லை. இவர்களின் நிலைமையை அறிந்து கொண்டு அந்த ஊர் கோயில் பூசாரி பெண் குழந்தை (கை குழந்தை தங்கையை துர்கா) விற்க ஏற்பாடு செய்கிறான்  இதை தெரிந்து கொண்ட தனுஷ் அந்த பூசாரியை வெட்டி சாய்த்து விட்டு  தம்பி, தங்கையுடன் அந்த ஊரிலிருந்து வரும் காய்கறி வண்டியில் ஏறி  அருவாளுடன் சென்னையில் வந்து  இறங்குகிறார் காய்கறி சந்தையில் வேலை செய்யும் சேகரின் (செல்வராகவன்) இவர்களுக்கு உதவி செய்கிறார்   ஆளும் வளர்கிறார் வாலிப வயது அடைகிறார்கள் தனுஷ் அந்த ஏரியாவில் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கடை நடத்தி, ஒரே குடும்பமாகப் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்..தங்கை துர்கா மீது என்றால் மூன்று பேருக்கும் அதிக பாசம் தனுஷ்க்கு (ராயன்) அவள் தான் மூச்சு. தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க விரும்புகிறார் திருமண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதே ஏரியாவில் இரண்டு ரவுடி கும்பல் (கேங்ஸ்டர்களான) S J சூர்யா எதிர் கோஷ்டி சரவணன் மோதல் உள்பகையுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது அதே ஏரியாவில்  இஸ்பெக்டர்ரை எரித்து கொன்றவரின் மகன் காவல் துறை அதிகாரியாக  பிரகாஷ்ராஜ் வருகிறார் தன் அப்பாவை எரித்து கொலைகாரனை பழிதீர்க்கவும் உள் பகை வைத்து கோஷ்டி மோத தலை  உருவாக்குகிறார் :இரு ரவுடி கோஷ்டி கும்பலில் தனுஷ் (ராயன்) சிக்கி கொள்கிறார் எப்படி சிக்கினார்! மீண்டு வந்தாரா?தங்கை துர்காவிற்க்கு திருமணம் நடந்ததா ? போலீஸ் அதிகாரி ஏரியாவை சுத்தம் செய்தாரா? படத்தின் மீதி கதை...

தனுஷை அமைதியாக ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை செய்யும் நபராக இருக்கிறார். அமைதியாகவும் இருக்கிறார், தனது குடும்பத்திற்கு யாரவது ஏதாவது செய்தால்  அசுரனாக மாறி அவர்களை கொலை செய்யத் தயங்க மாட்டார். அருமையாக பொருத்தமாக இருந்தது 

தம்பிகளாக நடித்த இருவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது .
தங்கையாக நடித்த துர்கா  அண்ணன் | தங்கை பாசம்  அண்ணனுக்கு கொலையும் செய்யவாள் தங்கையாக அற்புதமாக நடித்துள்ளார் 
SJ சூர்யாக / சரவணன் நடிப்பு சிறப்பாக  இருந்தது.
போலீஸ் அதிகாரியாக நடித்த பிரகாஷ் ராஜ்  சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

 தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : ஏ. ஆர். ரஹ்மான் படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது,.
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், சிறப்பாக தன் பணியை செய்துள்ளார்.
படத்தொகுப்பு : பிரச்சன்னா படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் வைத்து சிறப்பக கொடுத்துள்ளார், 
நடன இயக்குனர் : பிரபு தேவா, நடன அசைவுகளின்  ஆட்டம் ரசிக்கும்படியாக இருந்தது மற்றும் இதில் பணியாற்றிய நடிகர் /நடிகை  , சரவணன். தனுஷுக்கு உதவும் பாத்திரத்தில் வரும் செல்வராகவன் சிறப்பாக தன் நடிப்பின் பங்களிப்பை  கொடுத்திருக்கிறார்  பட்டிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சில  காட்சிகளிலேயே தோன்றுகிறார். அபர்ணா பாலமுரளியும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். வரலட்சுமி, திலீபன், இளவரசு, தேவதர்ஷினி, அறந்தாங்கி நிஷா போன்றோர் சில காட்சிகளிலே வந்து போகிறார்கள். மற்றும் இப்படத்தில் பணியாறகறி தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இப்படம் ஆரம்பம் முதல் முடியும் வரை இரத்தம் தெறிக்க விடுகிறார்கள் வயது வந்தோர் மட்டும் பார்க முடியும் கண்டிப்பாக சிறியவர்கள் ,பலகீனமான இதயம் உள்ளவர் பார்க்க கூடாது.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்