"அக்காலி' திரைவிமர்சனம்

பி உகேஸ்வரன் தயாரித்திருக்கும் அக்காலி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத்.

இதில் நாசர் – டொனால்ட் மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே, ஜெய் குமார் – ஹம்சா ரஹ்மான், தலைவாசல் விஜய் – விஜய், ஸ்வயம் சித்தா – எஸ் சௌம்யா, வினோத் கிஷன் – வின்சென்ட், வினோதினி – தாக்ஷ்யாணி, அர்ஜை – செல்வம், சேகர் – டேவிட், யாமினி – யாஸ்மின், தரணி – அனிதா, பரத் – கௌதம், இளவரசன் – ஈசா, விக்னேஷ் ரவிச்சந்திரன் -விக்கி , சபீர் அலி – சபீர் அலி, மசிஹா சபீர் – ஜானிஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு- கிரி மர்பி , இசை – அனிஷ் மோகன் , கலை இயக்குனர் – தோட்டா தரணி, ஆடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா, எடிட்டர் – இனியவன் பாண்டியன், சண்டைக்காட்சி – தினேஷ் காசி, டப்பிங் இன்ஜினியர் – ராம் கதிர்வேலு,மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவன்.. என்ற அர்த்தத்தில் வெவ்வேறு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தையாம்.

வித்தியாசமான கதைக்களங்களை கொடுக்க நம் இயக்குனர்கள் கதை தேடல் முயற்சி செய்து வித்திய சமான புதிய  முயற்சி இந்தப் படத்தை பார்த்தபின் சொல்லலாம்.

போதை மருந்து கடத்தல் கும்பல்  பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு அங்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது வித்தியாசமான வழிபாடு முறை சாத்தான்களை பூஜை செய்து நரபலி கொடுக்கும் ஒரு கும்பலை பார்கிறார் எதற்காக அந்த வழிபாடு இவர்கள் யார்?  அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள்  அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போக, என்னதான் நடக்கிறது  அவர்களைச் சுற்றி பல மர்மங்கள் இருப்பதையும், பலர் காணாமல் போனதன் பின்னணியில் யார்? இந்த வழக்கில் இருந்து  வெளியேறச் சொல்லி  உயர் அதிகாரியான தலைவாசல் விஜய் விசாரணையைத் தடுத்து நிறுத்துகிறார் மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருகிறது ஜெயக்குமார்க்கு !ஆனாலும் விடாமல் அந்தக் கேசை துப்பறிந்த ஜெயக்குமாருக்கு கிடைத்தது என்ன…  அவர்கள் யார். படத்தின் மீதிகதை ...

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெய்குமார்தான் கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ போல வருகிறார். இரண்டாவது பாதிக்கு மேல் அறிமுகமாகும் கிறிஸ்துவ மத போதகர் நாசர் இடைவேளைக்கு பின் பாதிப்படத்தை அவர் தான் படமுழுவதும் ஆக்கிரமிக்கிறார்.

காவல்துறையில் உயர் அதிகாரியாக வரும் தலைவாசல் விஜய்யுடன், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என பல கதாபாத்திரங்கள் படத்தில் நடித்தாலும். அவர்களை அடையாளம் காண்பது  கொஞ்சம் சிரமாக தான் இருந்தது

பெரும்பாலும் இருட்டில்தான் காட்சிகள் என்பதால் கிரி முர்பியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த அமானுஷ்ய உலகத்துக்குள் இழுத்துச் செல்கிறது. அனிஷ் மோகனின் இசை, த்ரில்லருக்கானப் பணியைச் செய்திருக்கிறது. தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் சாத்தான் பூஜை வழிபாட்டுக் குகை  அரங்கம் செம சூப்பர் (Super) படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன், அந்த சேஸிங் சண்டைக்காட்சி உட்பட நீளமான பல காட்சிகளில் கொஞ்சம் வெட்டி எடுத்திருக்கலாம் 

ஆரம்ப முதல் இறுதி வரை இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று குழப்ப நிலையே நீடிக்கிறது இந்தப் படத்தில் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. இதன் அடுத்த பாகத்தை பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற ரீதியில் கதை முடிகிறது. 



Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்