விருந்து திரை விமர்சனம்
நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாமர கண்ணன்.
இதில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர், ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்: தினேஷ் பள்ளத், இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா, மக்கள் தொடர்பு – சரண்.
படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்து ஓடிவருகிறார் இவர்களின் குடும்ப நண்பரும் அரசியல் கட்சி தலைவர் காப்பாற்றி தன்பாதுகாப்பில் வைத்திருக்கிறார் கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அரசியல்வாதி வேறு இடத்திற்கு பாதுகாப்பாக நம்பிகையான நபருடன் அனுப்புகிறார் திடீர் நாயகி வண்டியை நிறுத்த சொல்லி மாற்று பாதை வழியாக வண்டியை-யை ஒட்டச் சொல்கிறார் மறுபடியும் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், காட்டுகள் உள்ள தனது வீட்டில் தங்கை வைக்கிறார் . ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? அர்ஜுனை அவர் கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? நிக்கி கல்ராணியை சுற்றி நடக்கும் மர்ம பின்னணிக்கு காரணம் யார்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அடிதடி ஆக்ஷன் சண்டை காட்சிகளுடன் விறுவிறுப்பான காட்சிகள் நகர்தல் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாரத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் திரில்லர்,புதிரான தான் ‘விருந்து’.
இதில் நடித்தவர்கள், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அவருக்கு ஜோடியோ, டூயட் பாடலோ இல்லை என்றாலும், நடிப்பு சண்டை காட்சிகள் தூள் கிளப்புகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டு ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதற்கான விடை தேடி செல்லும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ஹேமந்த் (கிரீஷ் நெய்யார்), ஒரு அப்பாவி மற்றும் நோயாளிக்கு இலவசமாக மருத்துவமனையில் கொண்டு செல்வது உதவி செய்யும் ஆட்டோ டிரைவர், நாயகின் தாய் இறக்கும் முன் ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து விடுகிறார் ரகசியத்தை வெளி சொல்லாமல் உள்ளே வைத்திருக்க முடியால் தவிப்பும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க அவர்களுடன் ஒன்றாக பயணம் செய்கிறார் . அவருடைய நடிப்பு எல்லார் மனதிலும் இடம் பிடிக்கிறார்
சில காட்களில் என்றாலும் ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரமும், நடிப்பும் மிரட்டல். பாலண்ணா என்ற கதாபாத்திரத்தில் அரசியல் கட்சி தலைவராக சூப்பர்Super இவரின் கதாபாத்திரம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இவருடை நடிப்பு திரையுலகில் பேசபடும்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் காட்டு பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் அழகையும் நம் கண்களுக்கு விருந்தாக இருந்தது திகில் காட்சிகளின் பதற்றத்தையும் இவர்களது கேமரா சரியாக பதிவு செய்திருக்கிறார்
காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், கடைசி காட்சி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்போடு ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக வெட்டி சேர்த்திருக்கிறார்
ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் கேட்கும் ராகம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைந்திருந்தது. மற்றும் இப்படத்தில் பணியாற்றி தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்
அர்ஜுனையும், அவரது ஆக்ஷனையும் நீண்ட இடைவெளி பிறகு பார்த்தாலும் அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும், அவரது நடிப்பு இருந்தது.
இயக்குநர் தாமர கண்ணன், இறுதியில் அர்ஜுன் மூலமாக மக்களுக்கு, குறிப்பாக படித்தும் சிலர் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வாழும் முட்டாள் மக்களுக்கு இது ஒரு சாட்டையடியும் கொடுத்திருக்கிறார்.
இப்படம் மொத்தத்தில், சூப்பரான சஸ்பென்ஸ் திரில்லர் அனைவரும் பார்க்கும் "விருந்து"