"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்
டைரக்டர் லோக பத்மநாபன் எழுதி, நடித்து, இசையமைத்து 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி. இதில் இவருடன் அம்ச ரேகா, செய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கே.ராஜ சேகர், இசையமைப்பாளர் – லோக பத்மநாபன், பின்னணி இசை ஏ.டி.ராம், எடிட்டர் – ராஜேந்திர சோழன், பாடல்கள் – அரவிந்த், லோக பத்மநாபன், வா கருப்பன், நடனம்- சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி, சண்;டை – மெட்ரோ மகேஷ், மக்கள் தொடர்பு- ஜெ.கார்த்திக்
தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது.
இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் உயிருக் உயிராக காதலிக்கிறார்.இந்த ஆரம்பத்தில் இவனின் காதலை ஏற்க மறுக்கிறாள் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியும் ஒன்று சேர்கிறார்கள் தனிமையில் இருவரும் சந்தித்து இன்பம் காண்கிறார்கள் இதனால், நாயகி கர்ப்பமடைந்து விடுகிறார். கர்ப்பமடைந்த செய்தியை நாயகி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனிடம் கெஞ்சி கேட்க, அவர் மறுப்பு சொல்ல ! நாயகி போலீஸ் போவேன் என்று சொல்லுகிறாள் நாயகன் நடந்த விஷியத்தை, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் சொல்லிவிடுகிறார் ஆனால், நண்பர்கள் இதை நம்ம சாதிக்கு அவபெயர் அசிங்கம் வந்து விட கூடாது என்று நாயகியை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள் நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, அவரது காதல் வெற்றி பெற்றதா? , தலித் இளைஞரின் படுகொலைக்கான பின்னணி யார்? சாதிவெறி பிடித்த ஊர் பெரிய மனிதனின் (கைதடி ) வேலையாட்கள் கொலை செய்யபடுகிறது இதெல்லாம் எப்படி நடந்தது யார் காரணம் ? பல உண்மைச் சொல்லும் மீதி கதை..
நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபன், நாம் அன்றாடம் பத்திரிகை செய்திகளாக படித்து விட்டு கடந்து போகிறோம் ஆனால் இயக்குனர் ஊரில் நடந்த கொடும் சம்பத்தைகும் அவரால் மறக்க முடியவில்லை காட்சிகளாக நம் கண்முன் நிறுத்தி படத்தை இயக்கி, தயாரித்து,இசையமைத்து கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், அவருக்கு பாராட்டு எந்த இடத்தில் தனக்கான தனித்துவத்தை ஏற்படுத்திகொள்ளாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையின் நாயகனாக பயணித்து சிறப்பாக கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்சரேகாவுக்கு கிராமத்து மண்வாசனை நாயகிக்கான அம்சங்கள் இருந்தன தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகம் குறையில்லாமல் செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கொலைகாரகளிடம் கெஞ்சும் காட்சி கல்நெஞ்சையும் கரையை செய்கிறது.
ஜெய்பீம் மொசக்குட்டியின் கள்ளகாதலி லீலைகள் கொஞ்சம் ஓவராக உள்ளது .மற்றபடி சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் . மணிமாறன், ரெஜினா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் . இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக இருந்தது
லோக பத்மநாபன் இசையில், அரவிந்த், லோக பத்மநாபன், வா.கருப்பன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.ராஜ சேகரின் கேமரா, கிராமத்து காட்சிகளை சரியாக படமாக்கியிருக்கிறார் . படத்தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் பணியும் தேவையற்றதை வெட்டுதல் கதைக்கு தேவை காட்சிகள் மட்டும் சேர்த்தல் நேர்த்தியாக
முதல் படத்திலேயே நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு என பன்முகங்கள் பயணித்திருக்கும் லோக பத்மநாபன், சாதி வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, குறிப்பாக இளம் பருவத்தில் பயம் அறியாத வரும் காதலை (உண்மையான அன்பை) காதலர்களும், அவர்களது எதிர்காலத்தையும் சிதைக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்
சாதி ஆணவக் கொலைகள் பற்றி பேசும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்து இருந்தாலும் இந்த படம் இறுதிகாட்சி (க்ளைமாக்ஸ்) யாரும் எதிர்பாரத காட்சியாக இருந்தது இயக்குநர் லோக பத்மநாபன், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சினிமா மூலம் தனது சமூகப் அக்கறை பணியை சிறப்பாக செய்திருக்கிறார் . தமிழ் திரையுலாகில் நல்ல எதிர்காலம் உள்ளது.