விராயி மக்கள் திரை விமர்சனம்.

ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா.

இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன்,  பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ்.

அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் சிறு வயதிலேயே அப்பா இழந்து அம்மா பாண்டி அக்கா அரவணைப்பில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டன், நான்காவது மகள் தீபாசங்கர் இவர்கள் அண்ணன் தம்பி தங்கையுடன் பாசமாகவும் ஒற்றுமையாகவும் அண்ணன் வார்த்தைக்கு மறுப்பு செல்லாத தம்பி ,தங்கையாக வாழ்ந்தார்கள் தங்கை தீபா சங்கர் திருமணம் ஆகி வேறொரு ஊருக்கு சென்று விடுகிறார் . ஊரில் பெரும் பஞ்சம் மழையில்லை விவசாயம் செய்ய முடியவில்லை அந்த ஊர் மக்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்கள் வேளாண் ராமமூர்த்தியும் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார் திடீர் ரென்று  இவர்களின் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்படுகிறது பகையாளி போல் பார்த்துக் கொள்வது நல்லது கெட்டது  கலந்து கொள்வதில்லை இது ஒரு பக்கம் இருக்க .தங்கை தீபா மகளை வேளாண் ராமமூர்த்தி மகன் காதலிக்கிறான். பல வருடமாக பிரிந்த பாசக்கார குடும்பங்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அண்ணன் தம்பி தங்கை பாசஉறவுகளில் பெரும் பகையை மூட்டியது யார்  ? அதன் பின்னனி என்ன? என்பதன் படத்தின் மீதிக்கதை.

வீராயி மக்கள் குடும்பத்தில் : நடித்தவர் முதல் மகன் வேளாண் ராமமூர்த்தி கம்பீரமான நடையுடன் பாசகார அண்ணாவும், தம்பி  ,மாரிமுத்து அண்ணன் சொல்படி நடப்பவர் அண்ணன் மேல் மிகுந்த மரியாதை  வைத்திருப்பவர் ,தங்கை தீபா சங்கர் அண்ணன் பாசத்திற்க்காக ஏங்கி தவித்து அழும் காட்சி கல்நெஞ்சையும் கரையவைக்கும்  இவர்களுக்கு அம்மாவாக நடித்த பாண்டிய அக்கா நடிப்பு அற்புதம்  இவர்கள் அத்தனை பேரும் போட்டி போட்டு நடிப்பை கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்கள் .

பிரிந்த சொந்தங்கள் அப்பா, சித்தப்பா, அத்தை மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கும் காட்சிகளில் சுரேஷ் நந்தாவின் நடிப்பு  யதார்த்தம்.

இதில் நடித்த கதாபாத்திரம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .

இன்றைய சினிமாவில் பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் ரத்தத்தை கொப்பளிக்க வச்சி தெறிக்கவிட்டு கொலைகள் செய்வது எப்படி எந்தெந்த ஆயுதங்கள் வித்தியாசமான ஆயுதங்கள் கொண்டு கொலை செய்வது யோசிச்சு பட காட்சிகள் வைக்கிறார்கள். இவர்கள் மத்தியில் அண்ணன்,தம்பி ,தங்கை அம்மா உறவுகளை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. அவருக்கு வாழ்த்துக்கள் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

ஒளிப்பதிவு :சீனிவாசன் :கிராமத்தின் அழகை அள்ளி தெரித்துள்ளார்

இசை :தீபன் சக்ரவர்த்தி, படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது.

 எடிட்டர் – முகன் வேல், தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார்.

இப்படத்தில் பணியாற்றிஅனைத்து தொழிற்கல்விகளும் சிறப்பாக தன் பணி செய்துள்ளனர்.

வீராய் மக்கள் உறவுகளின் பாசத்தை உயர்த்தி சொல்லும்   அனைவரும் பார்க்க  கூடிய படம்.

அறந்தாங்கியில் உள்ள கிராமத்தில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகள் தீபா சங்கர், நான்காவது மகனையும் கணவனை இழந்த வீராயி விறகு சுமந்து கஷ்டப்பட்டு தன் நான்கு பிள்ளைகளை வளர்கிறார். இந்த குடும்பத்தில் மற்றவர்கள் விவசாயத்தை பார்த்துக் கொண்டு கடைசி மகனை மட்டும் நன்றாக படிக்க வைக்கின்றனர். வேலராமமூர்த்திக்கு ரமாவையும், மாரிமுத்துவிற்கு செந்தி குமாரியையும் மணமுடிக்க, தீபா சங்கருக்கும் மணமாகி பக்கத்து கிராமத்திற்கு சென்று விடுகிறார். வீராயி தன் இருமகன்கள், மருமகள்கள், பேரன்களுடன் ஒன்றாக வசிக்கிறார். கடைசி மகன் வெளியூருக்கு சென்று படிக்கிறான்.  வீராயி மற்றும் அனைவரிடமும்  இளைய மருமகள் செந்தி குமாரி எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.  கிராமத்தில் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்படுகிறது. அதனால் வேலராமமூர்த்தி திருப்பூருக்கு குடும்பத்துடன் சென்று வேலை செய்து பணம் அனுப்புகிறார். நாளடைவில் பணம் வந்தவுடன் இளைய மருமகளின் நடவடிக்கை பிடிக்காமல் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார் வீராயி. பெரிய மகன் வேலராமமூர்;த்தி ஊரிலிருந்து திரும்பி வந்து தாயை சமாதானப்படுத்தி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். வெளியூரில் படிக்கும் கடைசி மகனும் படித்து முடித்து விட்டு அங்கேயே கலப்பு திருமணம் செய்து கொண்டு வேலை செய்து வாழ்கிறார். மகன்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லாமல் போக சொத்தை பிரிக்க மாரிமுத்து பஞ்சாயத்தை கூட்ட அனைத்து சொத்துக்களும் பிரிக்கப்பட்டு குடும்பமே சிதறி விடுகிறது. இதனால் மனஉளைச்சலில் வாழும் வீராயி நாளடைவில் மரணமடைகிறார். இது இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் கதையின் சுருக்கம். அன்றிலிருந்து மகன்கள் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லாமல் தனித்தனியே குடும்பத்துடன் சென்று விரோதிகளைப் போல் வாழ்கின்றனர்.  வேலராமூர்;த்தியின் இளைய மகன் சுரேஷ் நந்தா அத்தை தீபா சங்கரின் மகளான நந்தனாவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். ஆனால் நந்தனா பிரிந்த குடும்பத்தால் தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார். சுரேஷ் நந்தா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்வதாக கூற இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இவர்களால் பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா? அவர்களது பகையை தீர்க்க முடிந்ததா? அனைவரும் ஒற்றுமையாக வீராயி மக்களாக வாழ்ந்தார்களா? என்று கூட்டு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக சொல்கிறது மீதிக்கதை.

பெரிய அண்ணனாக வேல ராமமூர்த்தி கம்பீரமான நடை, உடை, பார்வையுடன் தம்பிகளின் மேல் பாசத்துடன் இருப்பது, அவர்களுக்காக வாழ்வது, தாயை உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகளை வெறுத்து ஒதுக்கி விலகிச் செல்வது இறுதியில் பாசத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது என்று அக்மார்க் கிராமத்து பாசக்கார மனிதராக வாழ்ந்துள்ளார்.

இரண்டாவது மகனாக மறைந்த மாரிமுத்து அண்ணனின் பேச்சை தட்டாத தம்பியாக இருப்பதும், திருமணம் முடிந்தவுடன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் சண்டைப்போட்டு அண்ணனிடம் பகைமையோடு இருப்பது, பின்னர் தன் தவறை உணர்ந்து

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா” திரைப்படம்!!

A.D.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் "விருது".தற்பொழுது இரண்டாவது படம் "உலகநாதன் " என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்;