: "இங்க நான் தான் கிங்கு " திரைப்பட 'விமர்சனம்
.... &
இன்னைக்கு 28 வயசுக்கு மேல இருக்கற பசங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா? வேறென்ன? கல்யாணம் பண்ண பொண்ணு கிடைகலைன்ற பிரச்சனைதான். பையனுக்கு சமைக்க தெரியனும், கை நிறைய இல்லை, மூட்டை நிறைய நிறைய சம்பாதிக்கணும், நடந்தா அஜீத் மாதிரி இருக்கணும், சிரிச்சா சூரியா மாதிரி இருக்கணும்னு பொண்ணுங்க கண்டிஷன் போட்டா பசங்க எங்க தான் போவாங்க. பொண்ணுங்க இந்த மாதிரி கல்யாண கண்டிஷன் போடுறதால கல்யாணம் ஆகாமல் இருக்காரு சந்தானம். இதுல 25 லட்சம் கடன் வேற. யாரு கல்யாணம் பண்ணிக்கு வா? ஒரு வழியா ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பிரியாலயா (நம்ம ஹீரோயின் தாங்க ) கல்யாணம் பண்ணிக்க ஒ கே சொல்றாங்க.
பொண்ணோட அப்பா, தம்பி ராமையாவும், தம்பி பால சரவணனும் பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. கல்யாணம் ஆனப்புறம் தான் தெரியுது, இது டுபாகூர் ஜமீன்னு. தம்பி ராமையாவுக்கு ஊரெல்லாம் கடன். சரி ஏமாத்தனதோட நிற்காத தம்பி ராமையா வீட்டோட மாமனாராகவும், தம்பி பால சரவணன் வீட்டோட மச்சினனாகவும் மாப்பிள்ளை சந்தானத்தோட வீட்டல டேரா போடுறாங்க. இதுக்கு நடுவுல கடன் தந்த விவேக் பிரசன்னா, சந்தானத்தோட வீட்ல நடக்கும் விபத்துல இறந்து போய்டுறாரு. இந்த விபத்தை மறைச்சு அப்பாடான்னு மூச்சு விடுற நேரத்துல விவேக் பிரசன்னா உயிரோட வர்றாரு. எல்லாரும் மண்டை குழம்பி கசாயம் ஆகுற அளவுக்கு ஆயிடுறாங்க. இந்த குழப்பதை வச்சு ஒரு சூப்பர் காமெடி படத்தை தந்துருக்காரு டைரக்டர் ஆனந்த் நாராயணன்.
... & திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் வெற்றி (சந்தானம்), சொந்தமாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கியதில் 25 லட்ச ரூபாய் கடனில் உள்ளார். ஆதரவற்றவரான அவரை மணந்துகொள்ளப் பெண்ணையும் கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையும் தரும் வரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்னபுரி ஜமீனான விஜய்குமார் (தம்பி ராமையா) தன் மகளான தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அக்குடும்பமே ஏற்கெனவே கடனிலுள்ள குடும்பம் என்பது வெற்றிக்குத் தெரிய வருகிறது. தேன்மொழியோடு, ஜமீன் விஜய்குமாரும் அவரது மகன் பாலாவும் (பால சரவணன்) வெற்றியின் வீட்டில் 'வீட்டோடு மாமனார், மச்சானாக'
இந்தக் கலாட்டா குடும்பத்தால் மிகப்பெரிய பிரச்னை ஒன்றில் மாட்டிக்கொள்ளும் வெற்றி, அப்பிரச்னையை இதே குடும்பத்தை வைத்து எப்படிச் சரி செய்கிறார் என்பதை காமெடி கதகளியாகச் சொல்கிறது இயக்குநர் ஆனந்த் நாராயணின் `இங்க நான் தான் கிங்கு'.
***1
கதைக்களம் சந்தானம் ஒரு தனியார் மேட்ரிமோனி கம்பனியில் பணியாற்றி வருகிறார். ஊருக்கெல்லாம் வரன் பார்க்கும் இவருக்கு பாவம் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சந்சந்தானத்திற்கு அம்மா, அப்பா குடும்பம் என யாரும் இல்லை. சொந்தமாக வீடு இருந்தால்தான் கல்யாணம் நடக்கும் என கடனில் வீட்டை வாங்கியிருப்பதால் பண நெருக்கடியி சிக்கிக் கொண்டுள்ளார். கம்பனி வெப்சைட்டில் நல்ல பெண் வரன் கிடைத்தால் இவரே ஒரு அப்லிகேஷனை போட்டு அலப்பறை செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் சந்தானத்திற் வரன் ஒன்று கிடைக்கிறது. அவர்கள் போடும் கண்டிஷன் மாப்பிள்ளை அனாதையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஜமீன் சொத்து அவர்களை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் அதை கூறுகிறார். ஜமீன் பெண்ணை திருமணம் செய்தால் மொத்த கடன் பிரச்சனையையும் தீர்ந்துவிடும் என நம்பி திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். சந்தானம். ஆனால் திருமணம் ஆகியப் பிறகு தான் தெரியவருகிறது ஜமீனின் அனைத்து சொத்துகளும் கடனில் உள்ளது என மொத்தத்தையும் வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து விடுகின்றனர் அவர் குடும்பத்துடன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். சந்தானம் கடனை எப்படி அடைத்தார்? அவரின் குடும்பத்தால் என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பதே மீதிக்க
சந்தானம் தனது நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். ஆனால் உருவகேலியை மட்டும் விடவில்லை. அறிமுக நடிகை பிரியாலயாவுக்கு இது முதல் படம் என்ற நினைவு வராத அளவுக்கு நடிப்பில் தேர்கிறார். தம்பி ராமையா, பால சரவணனின் டைமிங் காமெடி கைக்கொடுக்கிறது. விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.இமான் இசையில் ‘மாயோனே’ பாடல் ரிபீட் மோடில் கேட்கலாம் போன்ற உணர்வை தருகிறது. மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் ஒரு இடத்தில் புதுமை படைத்துள்ளார். முதல் பாதியில் படம் சில இடங்களில் படம் காமெடியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திரும்பங்களால் நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
இமான் இசையில் ‘மாயோனே’ பாடல் ரிபீட் மோடில் கேட்கலாம் போன்ற உணர்வை தருகிறது. மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் ஒரு இடத்தில் புதுமை படைத்துள்ளார். முதல் பாதியில் படம் சில இடங்களில் படம் காமெடியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திரும்பங்களால் நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.