தலைமைச் செயலகம். (இணைய தொடர்) விமர்சனம்.

தலைமைச் செயலகம். இந்த தொடர் சுமார் 8 எபிசோட்களை கொண்டது. இம்மாதம் 17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாகி இருக்கிறது

**அங்காடித்தெரு வெயில், போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் முதன்முறையாக தலைமைச் செயலகம் வெப்  சீரியல் இயக்கியிருக்கிறார் இதில் நடிகர்கள் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் :

தொழில் நுட்பகலைஞர்கள் : ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார் .வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிக்குமார் படத்தொகுப்பு கலை இயக்குனர்: வி.சசிகுமார்,ஆக்ஷன் : டான் அசோக், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ் AIM இந்த தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்  உருவாகியிருக்கும் தொடர் தான் "தலைமைச் செயலகம்"

கதைய பார்ப்போம்

சுதந்திரத்திற்கு முன்பும்  வடநாட்டில் நிலத்தில் பணிபுரியும்  ,வேலையாட்கள் யாரையும் சக மனிதர்களாகவே மதிப்பதில்லை அடிமையாக வைத்து கொள்வார்கள் ஜமீன் பண்ணையில்  வேலை பார்த்த ஒரு பெண்ணை திருடியதாக கூறி அவளை அடித்து துன்புறுத்துகிறார்கள்  உயிர் .போகும் நிலைக்கு அடிக்கிறார்கள்  பெண் வெகுண்டெழுந்து  பண்ணை ஆட்களை வெட்டி சாய்க்கிறாள். அங்கிருந்து கதை தமிழ்நாட்டுக்கு பயணிக்கிறது.

தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.

சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்புவதால்  தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான்  வர வாய்ப்பிருப்பதாக அனைவரும்  நம்புகிறார்கள் இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது.

கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்க்கு. திட்டம் போட்டு வேலை செய்கிறார்  கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்காக வெறி பிடித்து வேலை செய்கிறார்கள் துடிக்கிறார்கள் .

அதேசமயம், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான நம்பிக்கை யானவரும்  ஷ்ரேயா ரெட்டியும் சூழ்ச்சியால்  அப்பதவிக்கு குறிவைக்கிறார்

அதேசமயம்,  வட மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் தேடுகிறது அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக  அந்த துர்கா கதாபாத்திரம் தொடர் கொலை செய்து வருகிறது.

தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். களத்தில் இறங்குகிறார் இந்த வழக்கானது   அனைத்தும் ஒரே  நேர்கோட்டில் சந்திக்கிறது. .

கிஷோர்க்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.?  கொலைகாரி துர்கா யார்? எதனால் கொலை செய்ய கிறாள் அந்த துர்கா  என்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது மீதமுள்ள கதையில்...

.

***பல்வேறு மாநிலங்களின் அரசியல் வித்தகரின்  காய் நகர்த்தல்களை கொண்டு  கதை உருவாகி இருக்கிறது.   இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக தெரிகிறது 

முதலமைச்சராக நடித்திருக்கிறார் கதாபாத்திரம் கிஷோர்.அவரும் அவருடைய குடும்பமும் நாம். பார்த்து கொண்டு நம் நாடு அரசியல் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்  சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை வட இந்தியர்கள் குழு அழிக்கத் துடிப்பதும் அதனால் நடக்கும் நிகழ்வுகளும் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படித்த பல செய்திகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

கொற்றவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு, அருமையான கதாபாத்திரம்  தன்னை முழுமையாக ஒப்படைத்து எல்லோரும் மனதில் இடம் பிடித்திருக்கிறார் இத்  தொடருக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பரத் துடிப்புடன்  செயல்பட்டிருக்கிறார்.

வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதைக்களம் அரசியல் என்பதால் காட்சிகளிலும் சூடு தெரிகிறது.கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் முற்றிலும் மாறுபட்டுத் தெரிய அவர்களுடைய ஒப்பனை மட்டுமின்றி இவருடைய ஒளியமைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

ஜிப்ரான் இசையும் சைமன்கேகிங்கின் கூடுதல் பின்னணி இசையும்  பார்வையாளர்களுக்குக் கடத்து செல்லும்  சிறப்பாக அமைந்திருக்கிறது.

தலைமைச் செயலகம் என்கிற அரசு நிர்வாகத்தலைமைப் பீடத்தின் பெயரை வைத்து அதற்கேற்ற கருத்துகளை தொடர் நெடுகத் தூவியிருக்கிறார்.

தமிழ்நாட்டைக் குறி வைத்து  கொண்டிருக்கும் வட இந்திய அரசியல் சூழ்ச்சியாளர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி யிருக்கிறார்  இயக்குநர் வசந்தபாலன்.

அரசியல் தெரிந்தவர்கள் உற்று நோக்கி  பார்ப்பார்கள்  தெரியாதவர்கள் ... அரசியல் வருபவரும் பார்க்க வேண்டிய தெரிந்து  கொள்ளவும் இத்தொடர் இருக்கின்றன ..  .



Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்