ஒரு நொடி திரைவிமர்சனம்

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர்.ஜி மற்றும் கே.ஜி.ரத்தீஷ் தயாரித்திருக்கும் ஒரு நொடி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.மணிவர்மன்.

இதில் தமன் குமார் – பருதி இளமாறன், வேல. ராமமூர்த்தி – கரிமேடு தியாகு, எம். எஸ். பாஸ்கர் – சேகரன், ஸ்ரீ ரஞ்சனி – சகுந்தலா , பழ. கருப்பையா – திரு ஞான மூர்த்தி (எம்.எல்.ஏ), தீபா சங்கர் – பொன்னாத்தா, நிகிதா – பார்வதி ,அருண் கார்த்திக் – ஜீவா, விக்னேஷ் ஆதித்யா – விநாயகம் , கஜராஜ் – யோக லிங்கம், கருப்பு நம்பியார் – மாணிக்கம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ், படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா, இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம், கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம், பாடலாசிரியர்கள் : சிவசங்கர் – ஜெகன் கவிராஜ் – உதயா அன்பழகன், சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில், வழங்குபவர் : ஜி. தனஞ்ஜெயன் (கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்நெர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்) மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீவெங்கடேஷ்


மதுரையில் சேகரன் என்பவர், தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க செல்லும்போது காணாமல் போகிறார். கடன் தந்து மற்றவர்களின் சொத்தை நயவஞ்சகமாக அபகரிக்கும் கரிமேடு தியாகு என்பவரை கைது செய்து விசாரணை செய்கிறது போலீஸ். இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இப்பெண்ணின் காதலன், தந்தை என அனைவரையும் விசாரணை செய்கிறது காவல் துறை. எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு நொடி, ஒரு விஷயம் காவல் துறை அதிகாரி மனதில் பிளாஷ் அடிக்கிறது. இந்த விஷயம் குற்றவாளியைப் பிடிக்க உதவுகிறது. அந்த விஷயம் என்ன என்பதுதான் சுவாரசியமான ட்விஸ்ட்டாக அமைகிறது..

நம் தமிழ் இயக்குநர்களாலும் திரில்லர் படத்தைச் சிறப்பாக தர முடியும் என நிரூபித்து உள்ளார் மதுரை மண்ணின் இயக்குநர் மணிவர்மன். மாறுபட்ட மதுரையை காட்டி அறிவியல் பூர்வமான திரில்லர் படத்தை தந்துள்ளார்.

ஒரு சிறு பிசிறு தட்டினாலும் குழம்பும் திரைக்கதையில் சிறு குழப்பமும் இல்லாமல் படம் நகர்கிறது. தொடர்ந்து விசாரணை செய்வதாக படம் நகர்வது சற்று சலிப்பாக இருந்தாலும், ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் ரசிக்க முடிகிறது

எந்தக் கேரக்டரானாலும் தந்து பாரு’ என சவால் விடும் எம். எஸ். பாஸ்கர் இந்தப் படத்தில் சேகரனா சபாஷ் போட வைக்கிறார். அரசியல் பின்புலம் கொண்ட தாதாவாக அசால்ட் செய்கிறார் வேல ராம மூர்த்தி. நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் தருண் குமார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம். சாக்லேட் பாய் போல இருப்பவர் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அழகாக விசாரணை செய்வது நன்று! இதுபோன்று தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி ஹீரோவாக வர வாய்ப்புள்ளது.

****

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்