ரத்னம் பட விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில்,நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.  நடிகர்கள் , சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன் ,YG மகேந்திரன் , விஜயகுமார் ,மற்றும்  நட்சத்திர கும்பலே நடித்துள்ளனர்  நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக ஏப்ரல் 26 - வெளியாகியுள்ள . படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம் ……

1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்க நகைகளை கொள்ளை அடிக்கும்  மிகப்பெரும் கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான அந்த காட்சி படமாக்கி விறுவிறுப்பான தொடக்கம் ..

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும் சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் நம்பிக்கையான அடியாளாக இருக்கின்றார். விஷால்,  கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார்.

மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் மெடிக்கல் சீட் கிடைக்காமல் 4வது முறையாக நீட் எழுத வேலூர் வருகிறார் பிரியா பவானி சங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது. இங்கு பெரிய சண்டை காட்சி  நடக்கிறது விஷால் அவர்களிடமிருந்து கதநாயகியை காபாற்றுகிறார் இப்படியாக ஒவ்வொரு முறையும் கொலைகார மிருகங்களிடமிருந்து காப்பாற்றுகிறார்  

.பிரியாவைக் கொல்ல வெறித்தனமாக துடிக்கும்  கும்பலிடம் இருந்து தன் உயிரை பொருட்படுத்தாமல்  காப்பாற்றுகிறார்.. இது காதலாக இருக்குமோ என்ற என்னத்தில்  காதலை பிரியா சொல்ல நான் உன்னை காதலிக்கவில்லை என்கிறார் விஷால்.

அப்படி என்றால் பிரியாவை  விஷால் கண் இமை போல் பாதுகாக்க  காரணம் என்ன? இருவருக்கும் உள்ள உறவுகள்  என்ன?

பிரியாவைக் கொல்ல வரும் ஆந்திர கூலி படை  கும்பல் எதற்க்காக  என்ன அவர்களின் பின் பலம்  என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை

படம் முழுக்க எட்டு சண்டை காட்சிகள் எட்டும் தனித்தனி ரகமாக ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டு இருக்கிறது

விஷால் ஆரம்பமாகும் காட்சியே அதிரடியாக இருக்கிறது ஒரு பள்ளி மாணவியை தொட்டவணை கையை வெட்டும்  காட்சியோடு ஆரம்ப மாகிறார்  விஷாலின் அதிரடி ஆக்ஷனை தெறிக்க விட்யிருக்கிறார் ‘’ 

ஹீரோயின் பிரியா பவானி சங்கர் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் .

அதேபோல் சமுத்திரக்கனி படத்திற்க்கு பக்கபலமாக இருந்துள்ளார் , 

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் , காம்பினேஷன் ஒருவர் ஒருவர் திட்டிக்கொண்டு கலாய்க்கும் காட்சி ரசிக்கும்படியாக  கலகலப்பு இருந்தது

கெளதம் மேனன் வரும் காட்சி   தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக அசல்ட்டாக நடித்து தூள் கிளப்பிட்டார்..

ஒளிப்பதிவு ஒளிவீச்சு அருமை புதிய கோணத்தில் சன்டை காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட விதம் அருமை.

இந்த படத்தில்……ரத்தினமாக  (விஷால்)மல்லிகாவாக (பிரியா பவானி சங்கர், )பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக (சமுத்திரக்கனி, )
ராமச்சந்திர ராஜு, (கௌதம் வாசுதேவ் மேனன், )மூர்த்தி யாக
(யோகி பாபு)பீமா ராயுடுவாக (முரளி சர்மா, )சுப்பா ராயுடுவாக (ஹரீஷ் பேரடி) ,மற்றும்
விஜயகுமார்,மொட்டைராஜேந்திரன்,ஜெயபிரகாஷ் மோகன் ராமன், ,ஒய் ஜி மகேந்திரன் ,வேதா நாயகம், வேட்டை முத்துக்குமார்,துளசி என நட்சத்திர கும்பலே நடித்துள்ளனர்





விஷால் அவருக்கு பாதுக்காப்பு ஏன் கொடுக்கிறார். நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, நினைக்கும் ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் கும்பல் விஷால் உடன் மோதல் ஏன் , பிறகு விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை

படம் முழுக்க எட்டு சண்டை காட்சிகள் எட்டும் தனித்தனி ரகமாக ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டு இருக்கிறது விஷால் சண்டைக் காட்சிகளில் ,உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். அவருக்கு எமோஷனல் நன்றாக வருகிறது பிரியா பவானி சங்கர் குடும்பத்தை காப்பாற்ற துடிக்கும் போதும், வில்லன்களிடம் சவால் விட்டு உதார் காட்டும் போதும், நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.

ஒளிப்பதிவு அருமை புதிய கோணத்தில் சன்டை காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட விதம் அருமை.

DSP யின் இசை உயிரோட்டமாக இருக்கிறது பின்னணி இசை மிரட்டல், படத்தின் படத்தொகுப்பு ,அரங்க வடிவமைப்பாளர், மற்றும் காஸ்ட்யூமர், டி ஐ ,கலர் கரெக்ஷன், போன்ற பணிகளில் ஈடுபட்ட அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்

: யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் , காம்பினேஷன் ஒருவர் ஒருவர் திட்டிக்கொண்டு கலாய்க்கும் காட்சி கலகலப்பு

: பீமா ராயிடுவாக வரும் முரளி சர்மா நடிப்பில் மிரட்டுகிறார் வில்லனாக பார்வையாலே துவசம் செய்கிறார் ஒப்பனை செய்து கொண்டு களநிலவரத்தை கேட்டுக்கொண்டு அமைச்சர் முன்னாள் முனங வேட்டியை உருவி எரிந்து விட்டு ஆவேசப்படும் வில்லன் நடிப்பு அசத்தல் ரகம்

ஆளுங்கட்சி எம்எல்ஏவாக சமுத்திரக்கனி அவர் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷாலுக்கு ,படம் முழுக்க உதவி செய்து தோளோடு தோள் நின்று படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார் வெல்டன் சமுத்திரக்கனி
மற்றும் ஜெயபிரகாஷ் ,துளசி, விஜயகுமார், இவர்கள் பிரியா பவானி சங்கரின் அப்பா ,அம்மா, தாத்தாவாக ,வந்து படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்

மெடிக்கல் காலேஜ் கட்ட போராட்டம் நடத்தும் வில்லன் குரூப் அதிலிருந்து தப்பிக்கும் பிரியா பவானி சங்கர், அந்த ஐந்தரை ஏக்கர் நிலம் தான் பிரச்சனை கடைசியில் ஏழை குழந்தைகள் படிக்க பிரியா பவானி சங்கர் அரசாங்கத்துக்கு தானமாக எழுதி கொடுத்துவிட்டு போகும் இடம் சூப்பர்
: மொத்தத்தில் இந்த ரத்தினம் , ரத்தினமாகவே ஜொலிக்கிறது. ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு அசைவ விருந்து தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல மலையாளம் கர்நாடகா என எல்லா மொழிகளிலும் இந்த படம் வெற்றிவாகை சூடும் விறுவிறுப்பான திரைக்கதை, லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால், நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் .

***

.சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும்  சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார். நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார். 

இப்படியான நிலையில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கரை விஷால், சந்திக்கின்றார். அப்போது வில்லன்கள் கதாநாயகியை தாக்குகின்றனர். அதிலிருந்து நாயகியைக் காப்பாற்றும் விஷால், வில்லன்களை எப்படி சமாளிக்கின்றார். கதாநாயகியை வில்லன்கள் தாக்குவதற்கு காரணம் என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை. .

நடிகர் விஷால் என்றாலே ஒரு ஆக்சன் பிளாக் தான்.

அதுவும் இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்தால் சொல்லத் தேவையில்லை பக்கா மாஸ்.

* * 

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால்

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால்ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால்

நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.

இந்தப் படத்தில் விஷால் உடன் பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.


தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பயிற்சி கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.


கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்