பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்
நடிப்பு: யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், சேஷு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு மற்றும் பலர்
இயக்கம்: ஸ்வதீஷ் எம்.எஸ்
ஒளிப்பதிவு: சுபாஷ் தண்டபாணி
படத்தொகுப்பு: இளையராஜா.எஸ்
இசை: சாந்தன் & தர்ம பிரகாஷ்
தயாரிப்பு: ’அங்கா மீடியா’
வெளியீடு: ‘ஏவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்’ எஸ்.எஸ்.பிரபு
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
பணம் கொடுத்து படம் பார்க்க வருகிறவர்களை பொழுதுபோக்காக எவ்வளவு சிரிக்க வைக்க முடியுமோ அவ்வளவு சிரிக்க வைக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன், காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘பூமர் அங்கிள்’. அந்த லட்சியத்தை இந்த படம் எந்த அளவு எட்டிப் பிடித்திருக்கிறது? பார்க்கலாம்…
நாயகன் நேசம் (யோகி பாபு), ‘எமி’ என்ற கதைப்பெயர் கொண்ட தன் ரஷ்ய நாட்டு வெள்ளைக்கார மனைவியை விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது பிடிவாதமான முடிவை ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கிறார் மனைவி எமி, அதாவது, நேசம் தனது சொந்த ஊரில் உள்ள தனது சொந்த அரண்மனைக்கு தன்னை அழைத்துச் சென்று ஒருநாள் தங்க வேண்டும். இது நடந்தால் உடனே நான் விவாகரத்துக்கு உடன்படுவேன் என்கிறார் எமி. எதற்காக இப்படியொரு நிபந்தனை என்பது புரியாத நேசம், எப்படியோ… தனக்கு விவாகரத்து கிடைத்தால் சரி… என்ற எண்ணத்தில், ‘அரண்மனையின் மேல்தளத்துக்கு மட்டும் செல்லக் கூடாது’ என்ற பதில் நிபந்தனை விதித்து, எமியை தன் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.
நேசம், சிறுவயதில் தங்களை பெரியவர்களிடம் போட்டுக்கொடுத்து, பெயரை டேமேஜ் செய்ததால் திருமணமே செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவரது பழைய நண்பர்களான தாவூத் (சேஷு), பில்லா (பாலா), வல்லரசு (தங்கதுரை) ஆகியோர் நேசத்தை பழிவாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சொந்த ஊரில் தயாராக இருக்கிறார்கள். அதுபோல் அந்த ஊர் நாட்டாமையும் (ரோபோ சங்கர்) நேசத்தைக் கொலை செய்யும் முடிவுடன் காத்திருக்கிறார்.
நேசம் தன் மனைவி எமியுடன் அரண்மனைக்கு வந்தவுடன் உள்ளே நுழையும் பழைய நண்பர்களும், நாட்டாமையும் தத்தமது எண்ணங்களை நிறைவேற்ற ஒளிந்து ஒளிந்து முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையே, அரண்மனையின் மேல்தளத்துக்கு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறும் எமி, மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றுக்குள் நுழைய அடிக்கடி முயற்சி செய்கிறார். இதனால், தன்னை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எமி நிபந்தனை விதித்ததில் ஒரு உள்நோக்கம் – ஒரு சதித்திட்டம் – இருப்பதை நேசம் உணரத் தொடங்குகிறார்.
எமி ஏற்படுத்தும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குள் நேசம் தள்ளப்படுகிறார். அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வந்த பழைய நண்பர்கள், அவரது அபாயகரமான நிலையைப் பார்த்து மனமிரங்கி, பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.
அரண்மனைக்கு வந்திருக்கும் எமியின் உள்நோக்கம் – உண்மையான நோக்கம் – என்ன? அவர் செய்யும் சதிச்செயல்கள் என்ன? அவற்றை நேசம் எப்படி முறியடிக்கிறார்? என்பது ‘பூமர் அங்கிள்’ திரைப்படத்தின் கலகலப்பான மீதிக்கதை.
கதையின் நாயகன் நேசமாக யோகி பாபு நடித்திருக்கிறார். வழக்கம் போல் வெடுக் வெடுக் என படம் முழுக்க கவுண்ட்டர் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் அதுவே ஓவர் டோஸாக இருக்கிறது.
நாயகனின் மனைவி எமியாக வரும் வெள்ளைக்கார நடிகை ரொம்ப சீரியஸாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் தன் பங்குக்கு சிரிக்கவும் வைக்கிறார்.
நாயகனின் பழைய நண்பர்களான தாவூத், பில்லா, வல்லரசு ஆகியோரின் பாத்திரங்களில் வரும் சேஷு, பாலா, தங்கதுரை ஆகியோரும், நாட்டாமையாக வரும் ரோபோ சங்கரும் தத்தமது டிரேட் மார்க் காமெடிகளை படம் முழுக்க வாரி வழங்கி சிரிக்க வைக்கிறார்கள்.
திடீரென கதைக்குள் கொஞ்சம் கிளாமராக வரும் ஓவியா, கதைக்கு ஊறு விளைவிக்காமல், பாட்டுக்கு ஆடி, அதிரடி ஆக்ஷன் காட்டி ரசிகர்களை மகிழ்வித்துவிட்டு,மாயமாய் மறைந்து விடுகிறார்.
லாஜிக் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படத்தின் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களும் கண்டுகளிக்கக் கூடிய படமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். எனினும், சிரிக்க வைக்கும் காமெடிகளை இன்னும் சற்று அதிகமாகவே தூவியிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.
சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவும், சாந்தன் – தர்மபிரகாஷ் இசையமைப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
‘பூமர் அங்கிள்’ – எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், பார்த்து சிரித்து மகிழ்ந்து வரலாம்!
***
ஓர் அரண்மனை.அதில் சில மர்மங்கள்,அதற்குள் ஓர் இணையர்,அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் சில நண்பர்கள் இவர்களை வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க ஒரு படம் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்.
யோகிபாபுவுக்கு இணையராக ஒரு இரஷ்யநாட்டுப் பெண்ணை வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் பழக்க வழக்கமெல்லாம் தெரியாமல் அரண்மனை பற்றிய மர்மங்களை ஆராய்கிறார்.
அதேநேரம் யோகிபாபுவின் மீதான கோபத்தால் அவரைத் தாக்க வரும் மறைந்த சேசு, தங்கதுரை,பாலா,ரோபோசங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் வருகிறார்கள்.
யோகிபாபு வழக்கம்போல நடித்திருக்கிறார்.அவரை வைத்து உருவகேலி தொடர்பான வசனங்களை எழுதுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?
மற்ற நடிகர்கள் அனைவருக்கும் கதையில் கொடுக்கப்பட்ட வேலையைக் காட்டிலும் இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அதில் அவர்களுக்குப் பாதிவெற்றி கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற படங்களில் கவர்ச்சி நடனத்துக்கும் இடமுண்டு என்பதால் ஓவியாவை நடனமாட வைத்திருக்கிறார்கள்.அவரும் இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுபாஷ்தண்டபாணி,ஒரே இடத்துக்குள் சுற்றுகிறோம் என்கிற எண்ணம் வராதவாறு வண்ணமயமாகக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் ஆகியோர் இந்தக்கதைக்கேற்ற பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசையிலும் குறைவில்லை.
திரையரங்குக்கு வரும் இரசிகர்கள் நெஞ்சம் நிறையச் சிரிக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்.

படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
***
படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார் என்றதும் அவர்தான் பூமர் அங்கிளாக நடிக்கப் போகிறார் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
முதலில் பூமர் அங்கிள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதாகி பூமர் அங்கிள் ஆகிவிட்டார்.
அந்த வேடத்தில் நடிப்பவர் எம்.எஸ்.பாஸ்கர் ஆனால், இந்தக் கதையை நீங்கள் தெரிந்து கொள்ள படத்தின் இரண்டாம் பாதிதான் கை கொடுக்கிறது.
முதல் பாதியில் யோகி பாபுவை ஒரு ரஷ்யப் பெண் மணந்து கொண்டு அவரது பூர்வீக பங்களாவில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறார். ஆக அதற்காகத்தான் அவர் யோகியை கல்யாணம் செய்து கொண்டார் என்று அறிக.
அதே பங்களாவுக்குள் அந்த ஊர் நாட்டாமையாக வரும் ரோபோ சங்கர், சேஷு , கேபி பாலா, தங்கதுரை மற்றும் யோகி பாபுவின் அப்பாவின் அசிஸ்டன்ட் இருவர் என்று கும்பலே புழங்கிக் கொண்டு இருக்கிறது.
சரி… யோகி பாபுவின் விஞ்ஞானி அப்பா யார் தெரியுமா..? அவர் மதன் பாப். அவர் கண்டுபிடித்த 8.0 ஃபார்முலாவின் படிதான் மேற்படி ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் உள்ளிட்டோர் உருவானார்கள். ஆனால் அதை நம் இந்திய தேசம் கண்டுகொள்ளாமல் போக, உள்ளே புகுந்த அமெரிக்காக்காரன் இந்த பார்முலாவை தள்ளிக் கொண்டு போய் மேற்படி சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி விட்டு விட்டான்.
எனவே இந்தியாவுக்கு என்று ஒரு சூப்பர் ஹீரோவைத் தயார் செய்ய 9.0 என்ற ஃபார்முலாவை மதன் பாப் கண்டுபிடிக்க அதற்குப்பின் இறந்து போகிறார். அந்த பார்முலாவை இந்தமுறை ரஷ்யாவுக்கு தள்ளிக் கொண்டு போகத்தான் ரஷ்ய உளவாளி யோகி பாபுவின் மனைவி வேடத்தில் உள்ளே நுழைந்து இருக்கிறார்.
இந்த விஷயம் தெரியப் போய் மேற்படி காமெடி யன்களும் இந்த ஃபார்முலா வளையத்துக்குள் வந்து ஒரு கட்டத்தில் ரோபோ சங்கர் ஹல்க்காகவே மாறிவிடுகிறார்.