j பேபி திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ்விஸ்டாஸ் மீடியாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஊர்வசிதினேஷ்மாறன் மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் கவிதா பாரதிஜெயமூர்த்திசேகர் நாராயணன்ஏழுமலைதக்‌ஷாஇஸ்மத் பானுசபீதா ராய்பெ.மெலடி டார்கஸ்மாயாஸ்ரீ அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்

.இசை –  டோனி பிரிட்டோஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்படத் தொகுப்பு – சண்முகம் வேலுச்சாமிகலை இயக்கம் – ராமு தங்கராஜ்பாடல்கள் – கபிலன் உமாதேவிவிவேக்பத்திரிக்கை தொடர்பு  குணா.

 இயக்குநர் சுரேஷ் மாரியின், பெரியம்மா குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் கதை களம் இந்தப் படமாக உருவாகியுள்ளது.

மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தாயான நடிகை ஊர்வசி. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகனும்  கடைசிமகனும் பேசாமல் இருக்கின்றனர்.

கணவர் கட்டிக் கொடுத்த வீடு, கடனால் பறி போகிறது. குடும்ப பிரச்சனை மன உளைச்சலுக்குள்ளாகும் ஊர்வசி, மன நோய்க்கு ஆளாகிறார்.

ஊர்வசியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கிறார்கள். ஆனால் ஊர்வசி மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார். , ஊர்வசியோ அரக்கோணம் போவதாக நினைத்து கொல்கத்தா ரயிலில் ஏறி கொல்கத்தா சென்றடைகிறார்.

அவரை வீட்டுக்கு கூட்டி வர இரு மகன்களும்  பேசி கொள்ளமல் இருந்த (தினேஷ் / மாறன்)சேர்ந்து கொல்கத்தாவிற்க்கு  தாயை தேடி செல்கின்றனர். ஊர்வசி கிடைத்தார்களா இல்லையா? ஊர்வசியின் நிலை என்ன?என்பதே படததின் மீதி கதை....

பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம்  வெகுளித்தனத்தில் காமெடியும், பாசத்தில் நெகிழ்ச்சியும், சென்டிமென்ட்டில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார்


ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், இதுவரை காமெடி நடிகனாக வலம் வந்த இப்படத்தில் காமெடியை தாண்டி  குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்து இருக்கிறார். இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ்  யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ராணுவ வீரனாக சேகர்  நாராயணன், உண்மைச் சம்பத்தில் உதவிய அந்த நபரை அழைத்து வந்து நடிக்க வைத்தது சிறப்பான நடிப்பை கொடுத்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். மற்றும் இதில் நடித்த அனைத்து துணை நடிகர்கள் சிறப்பான தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

 அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இதுவரை யாரும் தொடாத கதைகளம் சொல்ல வந்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் திரையிலகில் உங்களுக்கு ஒர் இடம் உண்டு

இசை –  டோனி பிரிட்டோஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்படத் தொகுப்பு – சண்முகம் வேலுச்சாமிகலை இயக்கம் – ராமு தங்கராஜ்பாடல்கள் – கபிலன் உமாதேவிவிவேக்பத்திரிக்கை தொடர்பு  குணா. அனைவரும் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.

. J. பேபி இப்படம் மொத்ததில் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்.

ரேடிங் : 3.5

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்