தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர் கே சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம், இசை – ஸ்ரீPகாந்த் தேவா, பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக் , ஒளிப்பதிவு – ஆ. புகழேந்தி, பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல், கலை இயக்கம் – வீரசமர் , எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம், ஸ்டண்ட் – கனல் கண்ணன், நடனம் – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி, மக்கள் தொடர்பு – மணவை புவன்
இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.மார்ச் 15ஆம் தேதி வெளியானத.
கதைகளம் ;
நகரத்தில் காதலை.கிராமத்து காதலையும் காதலர்களின் பிரச்சனையும் அவர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? கிராமத்து காதல் வென்றதா ?நகரத்து காதல் வென்றதா? படத்தின் மீதிகதை. ...
ஆர்கே சுரேஷ் என்ட்ரி காட்சிகள் எல்லாம் பில்டப் செமயாக இருக்கிறது. படத்தில் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் வைக்கும் சாதி சங்க தலைவராக இருக்கிறார்அநியாயங்களை கண்டு வெகுண்டெழும் சண்டைகாட்சிகளில் அனல் தெறிக்கிறது.
தன் முரட்டுத்தனமான சண்டை காட்சிகள் இப்படத்தில் நாயகனாக முத்திரை பதிக்கிறார் . ஆர்கே.சுரேஷ், சிறப்பான மிகச்சிறந்த தேர்வு.
தெருக்கூத்து’ கலைஞரான சுப்பிரமணிய சிவா சரியான தேர்வு தன் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். இதனால், ஊர்காரர்கள் அந்தப்பெண்ணை கொலை செய்யும்படி முடிவெடுகிறார்கள் பெற்ற மகளை கொள்ள அவருடை மனநிலை படும்பாடு மனவேதனையை .பெண்ணின் தந்தையாக வாழ்ந்து காட்டியுள்ளார்
மற்றும் ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என மீதமுள்ள அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல் ஆகியோரின் பாடல் வரிகளில் சாதிக்கின் இசை மற்றும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கலந்து நன்றாக வந்துள்ளது.
பெண்களுக்கான துணிச்சலையும், தன்னம்பிக்கையை ஊட்டி பேசும் வசனங்கள் ‘அனைத்து சாதியினருக்குமானது’ இதற்காக இயக்குநரை பாராட்டலாம்.
நகர- கிராமத்து காதல் கதை ,பின்னணி இசை நன்றாக இருக்கிறது .கிராம வாழ்க்கை அழகாக காண்பித்திருக்கிறார்
இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.
நகர, கிராம காதல் அவர்கள் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்க வேண்டும் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுகள்! திட்டம் போட்டு அப்பாவி பெண்களை ஏமாற்று வேலை தூண்டும் தரம்கெட்ட அரசியல் கட்சி தலைவனை அடையாளம் காட்டியுள்ளீர் : பெண்களுக்கான துணிச்சலையும், தன்னம்பிக்கையை கொடுக்கும் வசனங்கள் ‘அனைத்து சாதியினருக்கு பொருந்தும். இதற்காக இயக்குனரை பாராட்டலாம். முதல் படத்தில் சரியான முத்திரை பதித்துள்ளார் :
இது சாதி படம் என்று பார்க்காமல் சினிமா என்றும், ஒவ்வொரு சமூகத்திற்கும் பாதுகாவலனை பற்றி பெருமை பேசும் படம் அனைத்து சாதியினரையும் ஏற்க்கும் பார்க்கும் படமாக உள்ளது.
ரேட்டிங் : 3.5
அநியாயங்களை கண்டு வெகுண்டெழும் சண்டைகாட்சிகளில் அனல் தெறிக்கிறது.
இது சாதி படம் என்று பார்க்காமல் சினிமா என்றும், ஒவ்வொரு சமூகத்திற்கும்