"அமீகோ கேரேஜ்" திரைப்பட விமர்சனம்.


:அமீகோ கேரேஜ் (ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம்) திரைப்படம் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். 

கதை கரு

 இப்படம் ஒரு இளைஞர் தவறான பாதையை தேர்வு செய்தால் அவரது வாழ்க்கை எப்படி மாறும் என்பதை இப்படம் சொல்லுகிறது .

அம்மா, அப்பா என்று அளவான குடும்பம், படிப்புக்கு ஏற்ற வேலை என்று வாழ்ந்து வரும் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், தான் எதிர்கொண்ட சிறு பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி அவரை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காக அவர் எடுக்கும் மிகப்பெரிய முடிவு அவரது வாழ்க்கையை வேறு பாதைக்கு அழைத்துச் செல்ல, அந்த பயணத்தால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகள் என்ன?, அந்த பாதையில் இருந்து விலகி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘அமீகோ கேரேஜ்’.

 

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்புகளுக்காக எந்தவித மெனக்கெடலும் மேற்கொள்ளாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார். இவ்வளவு தாடியுன் பள்ளி மாணவரா? என்ற கேள்வி எழும் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கான ஒரு வசனத்தை பேசிவிட்டு கடந்து செல்பவர், அடுத்தக் காட்சியில் கல்லூரி 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது, அவர் தம்பி என்று அழைத்தாலும், “அதெல்லாம் முடியாது..” என்று அடம் பிடிப்பது, அடுத்தடுத்த காட்சியில் பொறுப்பான பிள்ளையாக மாறி பணிக்கு செல்வது, திடீரென்று வரும் பிரச்சனையால ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது என ருத்ரா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.


படத்தைப்பற்றி பேசுவோம் :

நாயகன் மகேந்திரன் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார்.  அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு போதை பொருள் விற்று வரும் ஜி.எம்.சுந்தரிடம் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே ஊரில் பிரபல தாதாவுக்கு அடியாளாக இருக்கும் தாசரதி நரசிம்மன், பார் வாசலில் மது போதையில்  மகேந்திரன் பைக்கை எட்டி உதைக்கிறார். இதைப் பார்த்த மகேந்திரன், தாசரதி நரசிம்மனை  அடித்து விடுகிறார்

இதனால் கோபமடையும் தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழிவாங்க திட்டம் போடுகிறார். இறுதியில் தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழி வாங்கினாரா? தாசரதி நரசிம்மனிடம் இருந்து மகேந்திரன் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்புகளுக்காக எந்தவித மெனக்கெடலும் மேற்கொள்ளாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார்.திடீரென்று வரும் பிரச்சனையால ஆக்‌ஷன் அவதாரம்  எடுப்பது மகேந்திரன் சிறப்பாக  நடித்திருக்கிறார்.

அழகாக இருக்கும் நாயகி ஆதிரா நன்றாக நடிக்கவும் செய்கிறார் . சில காட்சிகளில் வரும் தீபா பாலுவும் தன் நடிப்பின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்  . 

அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர்,  இப்படத்தில் இயல்பான நடிப்பு மூலம் அனைவரின் கவனம் ஈர்க்கிறார்

வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் மிரட்டலான தோற்றதோடு, நடிப்பிலும் அசத்திருக்கிறார்கள் . மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பகலைஞர்கள் :

பாலமுரளி பாலு இசை மற்றும் பாடல்கள் கேட்கும் படியாக இருந்தது    ,விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதி சிறப்பாக இருந்தது மற்றும் , சி.எஸ்.பிரேம்குமார்  ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் சிறப்பாக செய்துள்ளனர்.


ஒரு சினிமாவுக்கு தேவையான காதல், குடும்ப சென்டிமெண்ட், , நட்பு, துரோகம், யோசிக்காமல் எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும்  பிரச்சனைகள் என்று படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கிறது படத்தின் இயக்குனரின் முதல் படம் சொல்ல வந்த கதை சிறப்பாக இருந்தது.  திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் அவருடைய முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் ... இப்படம் அனைவரும் பார்க்கலாம்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்