கார்டியன் திரைப்பட விமர்சனம்
ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குரு சரவணன் மற்றும் சபரி.
இதில் ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீPமன், அபிஷேக் வினோத், ஸ்ரீPராம் பார்த்தசாரதி, ‘மொட்டை ‘ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :- கதை, திரைக்கதை, வசனம் – குரு சரவணன், இசை – சாம் சி.எஸ், படத்தொகுப்பு – எம்.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், கலை – ‘லால்குடி’ என்.இளையராஜா, சண்டைப் பயிற்சி – ‘டான்’ அசோக், பாடல்கள் – விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி, மக்கள் தொடர்பு – ரியாஸ்ஹகமது
படத்தை பார்ப்போம் :
இயக்குனர் கே எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இதற்கு முன் கூகுள் குட்டப்பா படத்தை குருநாதரை வைத்தே இயக்கினார்கள்
இன்டீரியர் டிசைனர் அபர்ணா (ஹன்சிகா ). வேலை தேடுகிறார் இன்டர்வியூவில் தோல்வியை பல சந்திக்கிறார். தன் முயற்சியை கைவிடாமல் வேலை தேடுகிறார். இந்நிலையில் ஒரு இன்டர்வியூவில் சரியாக பதில் சொல்லவில்லை இருந்தாலும் அபர்ணாவுக்கு வேலை கிடைக்கிறது, அதன்பின் அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடந்தாலும், கூடவே கெட்ட சம்பவம் நடக்கிறது குழப்பமாகவும் காரணம் என்னெவென்று புரியாமல் யோசிக்கும் அவருக்கு இதெல்லாம் ஒரு ஆவிதான் செய்கிறது என்பது தெரியவருகிறது.
மேலும் அந்த ஆவியிலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் என்று கூறி தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை சொல்கிறது . அபர்ணா என்ன முடிவு செய்தார்? அந்த ஆவிக்கு உதவி செய்தாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹான்சிகா ஆக்ஷன் ஹீரோயினாக வேண்டும் என ஹாரர் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே வந்த பழைய கதை வெளியாகி இருக்கும் இந்த படத்தில் ஹன்சிகா முதல் பாதி வரை அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாம் பாதிக்கு மேல் பேய் அவதாரம் எடுக்கும் ஹன்சிகாவின் நடிப்பு பெரிதாக கவரவில்லை.
அதேபோல் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோரின் காமெடி நம்மை சிரிக்க முயற்சி செய்கிறார்கள் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. .
ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் சபரி மற்றும் குரு சரவணன் ( இருவர்) இப்படத்தில் தேர்வு செய்த நடிகர்கள் சூப்பர் படத்தின் கதை ஏற்கனவே வந்த கதை திரைக்கதையும் எடுபடவில்லை.
இசை – சாம் சி.எஸ், படத்தொகுப்பு – எம்.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், மற்றும் இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
இப்படம் நாம் எதிர்பார்ப்பது ஆஹா ...ஒஹோ... இல்லை!
ரேட்டிங் :2.5