போர் பட விமர்சனம்
டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா சார்பில் பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர் தயாரித்திருக்கும் போர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார்
இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி, பின்னணி இசை : ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி, ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா,எடிட்டர் : பிரியங்க் பிரேம் குமார், கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை ,பாடகர்கள் : சஞ்சித் ஹெக்டே, வி.எம்.மகாலிங்கம், வர்ஷா எஸ்.கிருஷ்ணன், கபில் கபிலன், பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், விக்னேஷ் ஸ்ரீPகாந்த், மோகன் ராஜன், அதிரடி இயக்குனர் : ரியாஸ் மற்றும் ஹபீப், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : பாலகுமாரன், ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், நிர்வாக தயாரிப்பாளர் : லக்ஷய் குமார், பிஆர்ஓ : சதீஷ்குமார்

டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி போன்ற படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார், இம்முறை கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் சீனியர்-ஜூனியர் மோதலை படமாக்கியிருக்கிறார். நிச்சயமாக அந்தப் பிரச்சனையை மட்டுமே படம் சார்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் அர்ஜுன் தாஸ் (பிரபு) மற்றும் காளிதாஸ் ஜெயராம் இடையே மீண்டும் பிரச்சனை உண்டாவது படத்தின் ஒன் லைனர் கதையாக இருந்தாலும், இவர்களைச் சுற்றி பல கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி கதைகள் ஒரே வரிசையில் நகர்கின்றன.
கல்லூரியில் நடக்கும் அநியாயங்களுக்கு சவால் விடும் போராளிப் பெண்ணாகவும் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக டி.ஜே.பானு (காயத்ரி) வருகிறார். ஒரு மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டியதற்காக கல்லூரி பேராசிரியரை தட்டி கேட்கிறார். அவருடன் இருக்கும் நித்யஸ்ரீ (வெண்ணிலா) கல்லூரியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் சத்யாவும் (அரசியல் கட்சித் தலைவர், கல்லூரி அறங்காவலர் மகள்) அரசியல் எதிர்காலம் குறித்து யோசித்து வரும் நிலையில் கல்லூரியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறார். வெண்ணிலா மற்றும் சத்யா இருவரும் தன் பாலின ஈர்ப்பாளர்கள். முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவி விஷயத்தில் தகராறு ஏற்படும். இதில் சாதி அரசியலும் நடக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை