க்ளாஸ்மேட்ஸ் விமர்சனம்

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி

இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்  :இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்,இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன், நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே., பேனர்: டிஓபி: அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் : ஜெய், இசையமைப்பாளர் : பிரிதிவி, பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி , நடன இயக்குனர் : சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து, ஸ்டண்ட் : ராம்குமார், ஸ்டில்ஸ்: சிவா, ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்,ஒலி வடிவமைப்பு: சி.ஏ.மைதீன் (மைட்டி ஸ்டுடியோ), மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்.

கால் டாக்சி டிரைவரான புது மாப்பிள்ளை அங்கையற்கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்க செலவிடுகிறார். இருவரும் மதுக்கு அடிமையாகி தங்கள் மனைவிகளை சந்தேகப்பட குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு இரு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இதனிடையே மதுபிரியராக இருந்து மது பழக்கத்தை விட்டு நல்ல மனிதராக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் மயில்சாமியை அங்கையர்கண்ணனும், ஷரவணசக்தியும் சேர்ந்து மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் இந்த மூன்று பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? தவறை உணர்ந்து மதுப்பழக்கத்தை கைவிட்டார்களா? என்பதே மீதிக்கதை.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்