"ஜிகிரி தோஸ்த்" திரைப்பட விமர்சனம்
இதில் ஷாரீக் (ரிஷி), அரண் வி (விக்கி), ஆஷிக் (லோகி), அம்மு அபிராமி (திவ்யா), பவித்ரா லட்சுமி (சஞ்சனா), சீவம் (அர்ஜுனன்), முலுP சரத் (மாரி) ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இணை தயாரிப்பாளர்கள் : எஸ் பி அர்ஜுனர், ஹாக்கா.ஜெ, ஒளிப்பதிவாளர்: ஆர்.வி.சரண், இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி, படத்தொகுப்பாளர்: அருள் மொழி வர்மன்,சண்டை பயிற்சி : மகேஷ் மாத்யூ, கலை: கிஷோர், பாடலாசிரியர்: சுதன் பாலா, மக்கள் தொடர்பு: பி. ஸ்ரீP வெங்கடேஷ்.
மூன்று நண்பர்களை பற்றிய படம் தான் ஜிகிரி தோஸ்த். நண்பர்கள் என்பதால் அவர்கள் அடிக்கும் லூட்டி பற்றிய ஜாலியான படம் இது என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. இது காமெடி படம் அல்ல த்ரில்லர்.
ஷாரிக் ஹசன், அரண், விஜே ஆஷிக் ஆகியோர் நல்ல நண்பர்கள். அவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படம் துவங்கிய வேகத்தில் காமெடி கதைகளம் காட்சிகளாக நகர்கிறது திடீர் ஒரு பெண்ணின் கடத்தலைப் பார்த்த பிறகு அவர்களின் பயணம் வேறு திசையை நோக்கி நகர்ந்து அவளைக் காப்பாற்ற நினைத்து கல்லூரியில் நிராகரிக்கப்பட்ட விக்கியின் கண்டுபிடிப்பு கருவி புதுமையான டெரரிஸ்ட் ட்ராக்கரைப் பயன்படுத்துகிறார்கள். விக்கியின் கண்டுபிடிப்பு. இருந்தாலும் இது ஒரு மர்ம கும்பலின் பிடியில் இருந்து பெண்ணைக் காப்பாற்ற கருவி உதவியது இறுதியில் அவர்களால் அந்த பெண்ணை காப்பாற்ற முடிந்ததா? எதனால்? மர்ம கும்பல் கடத்தியது மீதி கதை:
இதிலிருந்து சீரியஸான த்ரில்லருக்கு மாறிவிடுகிறது. ஆனால் காமெடியும் சரி த்ரில்லரும் சரி ஜிகிரி தோஸ்துக்கு கை கொடுக்காமல் போய்விட்டது.