"ஆயிரம் பொற்காசுகள்" :திரைபடவிமர்சனம்.


கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்திருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரவி முருகையா.

இதில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:-ஒளிப்பதிவு – பானு முருகன், இசை – ஜோஹன் சிவனேஷ், எடிட்டிங் – ராம் மற்றும் சதீஷ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – ஃபையர் கார்த்திக், நடனம் – அசோக் ராஜா, ஒலி – சதீஷ், ஒப்பனை – மணி, பாடல்கள் – கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா, தயாரிப்பு மேலாளர் – லோகநாதன், டைரக்ஷன் டீம் – கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

படத்தின் கதையைப் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சரவணன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரின் தங்கை மகன் விதார்த் உடன் இருக்கிறார், முதல் காட்சி முதல் முடியும் வரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக வந்துள்ளது  ஆயிரம் பொற்காசுகள். 

கதைகளம் :அரசு தரும் நிதி உதவி மூலம்  வீட்டின் பின் புறம் கழிப்பறை கட்ட மண்  தோண்டும் புதையல் பானை கிடைக்கிறது அதை உடைத்து பார்த்த  போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன .

குழி தோண்டுபவன் புதையலை முதலில் அவன் பார்க்க மறைக்க வீட்டின் உரிமையாளர்கள் அதை பார்க்க அரசுக்கு தெரியாமல் பதுக்கிவைத்து பங்குபோட திட்டம் போடுகிறார்கள் இதையடுத்து ஆயிரம் பொற்காசுகளும் நமக்கு மட்டுமே என சரவணன் மற்றும் விதார்த் சந்தோஷப்பட அவர்கள் நினைத்ததற்கு நேர் எதிராக நடக்கிறது.
இதை  ஊரில் பலருக்கு தெரிய, ஒவ்வொருவரும் பொற்காசில் பங்கு கேட்கிறார்கள்.
பங்கு கொடுத்தார்களா ? இல்லையா ?.படத்தின் மீதிகதை:

படத்தின் கதை ஓட்டம் ஹீரோவை சுற்றி இல்லாமல் ஊரில் உள்ள மனிதர்களை சுற்றி நகர்கிறது. நம்மை இப்படத்தை பெரிதும் ரசிக்கும் படி செய்கிறது. பொற்காசுகளுக்காக ஆசைப்படும் ஒவ்வொருத் தரும் தன் நடிப்பால் நம்மை ஈர்க்கிறார்.       

சுடுகாட்டில் குழி தோண்டுபவராக நடிக்கும் ஜார்ஜ் மரியான் நடிப்பில் இந்த முறையில்தான் சிறப்பான நடிப்பும் மக்கள் மனதில் நிற்கிறார் . சித்தப்பு சரவணன், ஹலோ கந்தசாமி இருவரும் வரும்  அனைத்து காட்சிகளிலும்  சிரிக்க வைக்கிறார்கள். படத்தின் ஹீரோ துணை கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே விதார்த்தை பாராட்டலாம் ஹீரோயின் அருந்ததி நாயர் ஹீரோவை காதலிப்பதை  தவிரவேறு வேலை இல்லை.கொடுத்த கதாபாத்திரம்  சிறப்பாக நடித்து இருக்கிறார்  

படத்தில் வரும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினை விட துணை கதாபாத்திரங்கள் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள். படத்திற்கு பெரிய பலமாக அமைந்துவிட்டார் சரவணன்.

இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு/பின்னனி இசை/எடிட்டர் மற்றும் அனைவரும் சிற்பாக தன் பணியை செய்துள்ளனர் .இயக்குனர் ரவி முருகையா. இக்கதையை தேர்வு செய்தது மக்களுக்கு கொடுத்து திறம்பட இயக்கி இருக்கிறார் அவருக்கு பாராட்டுகள் நன்றிகள் இப்படம் குடும்பதுடன் பார்க்கும் ரசிக்கவும் ஈர்க்கும் படமாக அமைந்துள்ளது.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்