"அவள் பெயர் ரஜினி" திரைப்பட விமர்சனம்: ( வித்தியசமான திரில்லர் கதைகளம்)
வினில் ஸ்கரியா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான், அஸ்வின் குமார், கருணாகரன், சைஜூ குரூப், ஷான் ரோமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜினி’. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் சொந்தமாக தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசைக்குழு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளது.
படத்தை பார்ப்போம்:
படத்தில் ஹீரோ காளிதாஸ் ஜெயராமின் மாமா (தங்கை நமீதா பிரமோத் ) நண்பனின் வீட்டிற்க்கு சென்றிருந்தார் பின் திரும்பி வரும் வழியில் அவரை மர்மமான முறையில் யாரோ
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சைஜூ குரூப் மனைவியான நமீதா பிரமோத் கண் முன்னாலயே கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்தை சிலர் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் கொலையை செய்தது ஒரு பெண் என்றும், சிலர் பேய் என்று சொல்ல காவல்துறை குழம்பி போகிறது. இதனிடையே சைஜூ குரூப் - நமீதா பிரமோத் உறவினரான காளிதாஸ் ஜெயராமுக்கு ஒரு பெண் தன்னை ஃபாலோ செய்வது போல தோன்றுகிறது. அந்த பெண்ணுக்கும் சைஜூ குருப் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதை கண்டறிகிறார். காவல்துறை உதவியுடன் அதனை கண்டிபிடிக்க முயலும் போது பல் வேறு பிரச்சனை சம்பவங்கள் நடக்கிறது. இறுதியாக கொலையாளி பெண்ணா? பேயா? , கொலைக்கான காரணம் என்ன? என்பது இப்படத்தின் மீதிக் கதையாகும்.
ஒரு திரில்லர் கதையை கையில் எடுத்துக் கொண்ட இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைத்தும் முடிந்தவரை சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் வேறெ லெவல் கலக்கி இருக்கிறார்
காளிதாஸ் ஜெயராம் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்
பிரியங்கா சாய் படத்தில் திருநங்கை அவருடைய மிரட்டலான நடிப்பு அசத்தல்
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு : இரவு காட்சிகள் மற்றும் அனைத்தும் தன் பங்களிப்பு சிறப்பாக இருந்தது பின்னனி இசை படத்து பக்கபலமாக இருந்தது எடிட்டர் : படத்தில் தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்து கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் அனைவரும் பங்களிப்பு சிறப்பு .
படத்தின் கதை ஒட்டம் விறுவிறுப்பாக நகர்கிறது. இதை கொஞ்சம் திரில்லர் பானியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார் பாராட்டு
இப்படம் ரசிக்கும் படியாக இருந்தது