"சைத்ரா" திரைப்பட விமர்சனம்
மார்ஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்திருக்கும் சைத்ரா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம். ஜெனித்குமார். தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சதீஷ் குமார், இசை – பிரபாகரன் மெய்யப்பன், பாடல்கள் – மணிகண்டன் விஜயலட்சுமி, எடிட்டிங் – எலிஷா, தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி,இணை தயாரிப்பு – கண்ணன் வரதராஜ், மக்கள் தொடர்பு – மணவை புவன். படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். . அதனை தொடர்ந்து தற்போது சைத்ரா வெளியாகி உள்ளது. இந்த சைத்ரா படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் அவிதேஜ் (கதிர் )சக்தி மகேந்திரா (திவ்யா), பூஜா (மதுமிதா) கண்ணன் (இன்ஸ்பெக்டர்), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதையின் நாயகி சைத்ராவிற்கு, கனவில் அவரின் இறந்துபோன நண்பர்கள் அடிக்கடி வருகின்றனர். இதனால் சைத்ரா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அப்போது கதையின் நாயகன் கதிரின் நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க கதிரை அழைக்கிறார்.
தனது மனைவிக்கு இருக்கும் இந்த அமனுஷிய பிரச்னைக்கு தீர்வு வேண்டி நண்பன் சிவாவை ஆனைமலை சித்தரை அழைத்துவர அனுப்பிவைக்கிறார் கதிர். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
யாஷிகா ஆனந்த நடிப்பு தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார் உடன் நடித்த நடிகர்களின் பங்களிப்பு பரவாயில்லை படத்தின் ஒளிபதிவு/பின்னனி இசை / எடிட்டர் சிறப்பாக இருந்தது இதில் பணியாற்றிய தொழில் நுட்பகலைஞர் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்
கதையில் ஒட்டம் யார் உயிரோடு இருக்கி றார்கள் என்பதை யூகிக்க முடியாமல் பாத்திரங்கள் உருவாக்கப் பட்டிருப்பதால் சஸ்பென்ஸ் காட்சிகள் எடுபடுகிறது வழக்கமாக பேய் வேறு உருவத்தில் தான் சினிமாவில் காட்டப்பட்டிருக்கிறது. இறந்தவர் என்று சொல்லகூடிய கணவன் மனைவி ஏன் அந்த வீட்டுக்கு திரும்ப திரும்ப வருகிறார்கள் அனைவரும் கண்களுக்கு தெரிவது எப்படி? உண்மையாகவே அவர்கள் இறந்தார்களா ? உங்கள் பல கேள்விகளுக்கு சைத்ரா விடை சொல்லும் எல்லா.பேயும் தங்களது தோற்றத்திலேயே வருவதால் எது பேய், எது நிஜபாத்திரம் என்று தெரியவில்லை இயக்குனர் புதிய கதைகளம் முயற்ச்சிக்கு பாராட்டு திரைகதையில் கவனம் கொஞ்சம் செலுத்திருக்கலாம் மொத்தத்தில் இப்படம் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது ?