"திரையின் மறுபக்கம்". திரைப்பட விமர்சனம்.

லியோவோடு மோதும் திரையின் மறுபக்கம்.

கதைகளம் :

சினிமா படம் தயாரிப்பு...
தியேட்டரில் படம் ரிலீஸ்... அதை பற்றி இப்படம் சொல்லும்...

படத்தை பார்ப்போம்:

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி. சென்னையில் நடிகர்ளை சந்திக்க வருகிறார் எதிர்பாராமல் டீ கடையில்  வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலை சந்திக்கிறார் இயக்குனர் சொல்லும் பில்டப்பை நம்பி சத்தியமூர்த்தி அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார்.

இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.
     
இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹிரோ ,துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார்.அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை...
     
திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson ) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை, வசனம் ,தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார். இந்த கதையை தேர்வு செய்தது பராட்டு.. கதையின் வேகம் அடுத்த காட்சி எதிர்ப்பார்ப்புடன் நகர்கிறது:

படத்தில் நடித்த நடிகர் பற்றி :

வாயில் வடை சுடும் இயக்குனர்  செந்திலாக நடித்த மணிகண்டன் நடிப்பு சிறப்பு சூப்பர்...
நிதின் சாம்சன் (Nitin Samson) ஜோதி,யாசர் சத்தியான்நாதுரை மற்றும் உடன் நடித்த நடிகர் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் சரியாக  நடிப்பை கொடுத்துள்ளனர்
 நடிகை"ஹேமா, ஸ்ரீ ரிஷா  தன் நடிப்பின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்:
 
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசையமைப்பாளர் N.C அனில் படத்திற்க்கு பாலமாகவும் பலமாகவும் இருந்தது ,எடிட்டர்: நிஷ்ஷாந்து சரியாக இருந்தது.
மக்கள் தொடர்பு: சிவக்குமார் மற்றும் இதில் பணியாற்றி அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு !

திரைப்படம் தயாரிப்பு பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் சொல்ல வந்ததை அழகாக சொல்லி உள்ளார்: இப்படம் இயக்குனர்க்கும் தயாரிப்பாளர்க்கும் பாராட்டு
இன்றைய காலகட்டத்தில்
பார்கவேண்டிய திரைப்டம்


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்