ஷாட் பூட் த்ரீ "திரைவிமர்சனம்.
இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு- சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை-ராஜேஷ் வைத்தியா, எடிட்டிங்-பரத் விக்ரமன், கலை- ஆறுசாமி, சண்டை-சுதேஷ், நிர்வாக மேற்பார்வை-அருண்ராம் கலைச்செல்வன், நிர்வாக தயாரிப்பு- வெங்கடேஷ் சடகோபன், இணை தயாரிப்பு-முகில் சந்திரன், தயாரிப்பு நிர்வாகி- கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன், பிஆர்ஒ- நிகில்.
கைலாஷ், பிரணநிதி, வேதாந்த் மூவரும் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள்.இவர்களுடன் பூவையார் : ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சினேகா- வெங்கட் தம்பதியருக்கு ஒரே மகன்; கைலாஷ் என்பதாலும் நன்றாக சம்பாதிப்பதாலும், அவனுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கும் பெற்றோருக்கு அவனிடம் அன்பாக பேச மட்டும் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கின்றனர். அதே போல் பல் டாக்டர் பெற்றோரின் மகள் பிரணநிதி நன்றாக பாடும் திறன் பெற்ற சிறுமி என்றாலும் அவளுக்கு வீட்டில் ஆதரவு இல்லை. சிங் குடும்பத்தில் பிறந்த வேதாந்த் வசந்தா, அனைவரிடமும் பாசமுடன், எந்த வேலை செய்தாலும் ஈடுபாடும் செய்யும் பூவையார். கைலாஷின்; பிறந்த நாளுக்கு பிரணநிதி, வேதாந்த் இருவரும் இணைந்து மேக்ஸ் என்ற கோல்டன் ரிட்ரிவர் நாய்க்குட்டியை பரிசாக கொடுக்கின்றனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைலாஷின் பெற்றோர் பின்னர் சம்மதித்து மேக்ஸை வீட்டில் வளர்கின்றனர். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு கைலாஷின் பெற்றோர் வேலை நிமித்தமாக ஊருக்கு செல்ல, கைலாஷ் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் வீட்டில் ஜாலியாக இருக்கிறார்கள் . இந்நேரத்தில் மேக்ஸ் நாய் காணாமல் போகிறது. கைலாஷ் மற்றும் நண்பர்கள் மேக்ஸை தேடிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் பெரும் தொந்தரவாக இருக்கும் தெரு நாய்களை பிடித்து கொல்ல திட்டமிடுகின்றனர். தெருவில் வழி தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும் மேக்ஸ் நாய் யோகிபாபுவின் ஆட்டோவில் ஏறிவிடுகிறது. யோகிபாபு கடனை அடைக்க மேக்ஸை நாய்யை விற்க முடிவு செய்கிறார். அதே சமயம் குழந்தைகள் நாயை கண்டுபிடிப்பதற்காக நடிகை த்ரிஷாவின் நாய் காணவில்லை என்று பொய்யாக முகநூலில் பதிவிடுகின்றனர். இதனால் மேக்ஸை தேட பலர் முன் வருகின்றனர். தொலைந்த மேக்ஸ் நாய் கண்டுபிடித்தார்களா? இல்லையா? மீதி கதை...
கலகலப்பான தந்தையாக வெங்கட் பிரபுவும், கறாரான தாயாக சினேகாவும் சிறிது நேரமே திரையில் வந்தாலும் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக கைலாஷ் ஹீத், பிரணதி பிரவீன், வேதாந்த் வசந்த் ஆகியோருக்கு அறிமுகப் படம் என்பதால் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக வேதாந்த் வசந்த் சண்டைக் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
ஆட்டோ ஓட்டுநராக யோகிபாபுவும், அந்த ஆட்டோவுக்குக் கடன் கொடுத்தவராக தீனாவும் ஒரு சில காட்சிகள் வந்து போகிறார்கள். வாட்ச்மேனின் மகனாகப் பள்ளிக்குச் செல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் 'மாஸ்டர் சிறுவன்' பூவையார். விலங்கு நல ஆர்வலராக 'பெட் ரேவதி' எனும் கதாபாத்திரத்தில் ஷிவாங்கி காமிக்களான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களோடு சேர்த்து மேக்ஸ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு கோல்டன் ரெட்ரீவர் நாயும் நடித்துள்ளது.
மூன்று சிறுவர்களின் நட்பு, அவர்களின் குடும்பம் என அறிமுக காட்சிகளை முடித்து கதைக்குள் நுழைகிறார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன்.
நாயை மையமாக வைத்து நகரும் கதையில் சிறுவனுக்கும் நாய்க்குமான உறவை இன்னும் அதிகமாகக் காட்டியிருக்கலாம். அவ்வாறு இல்லாததால் நாய் தொலைந்து போகும் முக்கியமான காட்சி சாதாரண ஒரு காட்சியாகக் கடந்துவிடுகிறது.
மொத்தத்தில் திரைக்கதையில் சுவாரஸ்யமற்றத் தன்மை, குழந்தைகள் படத்திற்கு உரிய நியாயங்களையும் பூர்த்தி செய்யாமல் போனது போன்ற விஷயங்களில் அவுட்டாகி வெளியேறியிருக்கிறது இந்த 'சாட் பூட் த்ரீ.'