"இந்த கிரைம் தப்பில்லை" திரை விமர்சனம்*

"இந்த கிரைம் தப்பில்லை" திரை விமர்சனம்* 

தேவகுமார் இயக்கத்தில்
 ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் "இந்த கிரைம் தப்பில்லை" 

 இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துகளை வெங்கட் ராவ், கிரேசி கோபால் கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஏஎம்எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார், சண்டை-கணேஷ்,உடை-என்.முரளிதரன், மேக்கப்-போபன் வரப்புழா, மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார் மேக்னா அப்போது அங்கு வரும் 3 பேரை தன் காதலிப்பது போல் நடித்து தன் பின்னால் சுற்ற வைக்கிறார்.

அதே சமயத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரரான ஆடுகளம் நரேன்  சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார்.
இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டம் தீட்டுகிறார்  

மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.?? ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார்.?? இதுதான் படத்தின் கதை.

பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களைள வேட்டை யாடி நாம் தண்டனை கொடுத்தாலும் தப்பில்லை என்ற கோணத்தில் கதை நகர்கிறது

 மேக்னாவின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது
 
படத்தில் ஒரு தெளிவான நகர்வு இல்லை இதில் பிரபாகரன், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் அவ்வபோது காட்சியில் காட்டபடுவது  ஏன் என்று புரியவில்லை?

படம் ஓடிக் கொண்டிருக்கும் போது  சம்மந்தமே இல்லாமல் சாதிய பாடலும் ஒன்று எட்டிப் பார்த்துச் செல்கிறது. எதற்காக யாருக்காக இந்த படங்களை இயக்குகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

ஆடுகளம் நரேனின் நடிப்பு செயற்கைத் தனமாக தெரிந்தது. பாண்டி கமல் எப்போதும் வெறி பிடித்தவராகவே சுற்றித் திரிகிறார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பாவையே அழைத்து வந்து கையில் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற கூறுவதெல்லாம் காட்சி நம் கண் முன்னே நிற்கிறது..
 இதில் நடித்த அனைவரும் இன்னும் நடிப்பு பயிற்ச்சி தேவை

 திடீரென்று பின்னணி இசைக்கும் படத்திற்கும் சம்மந்தமே இல்லை

ஒளிப்பதிவு : பரவாயில்லை

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் தேவையான கதைகளம்  கதையை எப்படி சொல்ல வேண்டும் என்று தெளிவாக சொல்லவில்லை எனவே இவர்களின் முயற்ச்சி பாராட்டு'

மொத்தத்தில் மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கும் "இந்த க்ரைம் தப்பில்ல" 
படம் பார்க்கும் மக்களுக்கு பொறுமை வேண்டும்  

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்