12 வயது மாணவி இயக்கிய படம்
"குண்டான் சட்டி"
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
----------------------------------------------
கதை
----------
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள். இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சேர்க்கிறார்கள். குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர... இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா ? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? என்பதே குண்டான் சட்டியின் மீதிகதை.
-----------------------------
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
எந்த நல்ல கருத்தையும் மாணவ பருவத்திலேயே அறிவுறுத்தினால் பிற்காலத்தில் வாழ்வியல் முறை சிறப்பாக அமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தி .
7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருப்பது அனைவரின் ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது
தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
சிந்தித்த கதை களத்தை தன்னுடைய தந்தையிடம் கூற உடனே மறுப்பேதும் கூறாமல்தானே முன் வந்து தயாரித்திருக்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தியின் தந்தை
டாக்டர்.எஸ்.ஏ கார்த்திகேயன்
பாடல்கள்/ பாடியவர்கள்
----------------------------------------------
(1) சிட்டுக்குருவி போல வட்டம் அடிப்போம்...
ஸ்ரீராம், வித்யூத் ஸ்ரீனிவாஸ்
(2) ஓட ஓட வெரட்டிப் பிடிப்போம்...
ஸ்ரீராம், வித்யூத் ஸ்ரீனிவாஸ்
(3) குண்டான் சட்டி,..
ஸ்ரீராம், வித்யூத் ஸ்ரீனிவாஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்
-----------------------------------------------
இசை- எம்.எஸ்.அமர்கீத்
எடிட்டிங்- பி.எஸ். வாசு
மக்கள் தொடர்பு வெங்கட்
திரைக்கதை வசனம் பாடல்கள் அரங்கள் சின்னத்தம்பி
தயாரிப்பு டாக்டர்
.எஸ்.ஏ.கார்த்திகேயன்
அரங்கன் சின்னதம்பியின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் சிறுவர்கள் கொண்டாடும் விதத்தில் இருக்கிறது. பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருப்பதோடு, முனு முனுக்கவும் செய்கிறது.
எம்.எஸ்.அமர்கீத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அதிலும், குண்டான் சட்டி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பார்வையாளர்களை குதூகலப்படுத்தும் விதத்தில் பயணிக்கிறது. மொத்தத்தில் சிறுவர்களை கவர்ந்து ஈர்க்க கூடிய இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். பி.எஸ்.வாசுவின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.
கதை இயக்கம் - பி.கே.அகஸ்தி
குழந்தைகள் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் அகஸ்தி. அனிமேஷனை அவ்வளவு கச்சிதமாக தெளிவாக காண்பித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எதை செய்யக் கூடாது என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார் அகஸ்தி.
கதை நகரக்கூடிய கதைகளம், அணில் செய்த உதவி என சின்ன சின்ன விஷயத்தையும் அவ்வளவு மெனக்கெடல் செய்து படத்தை இயக்கியிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் பெயர்களையும் எளிதில் மனதில் பதியும்படியாக கூறியிருக்கிறார்கள். ஆற்றில் சென்ற இருவரையும் காப்பாற்றிய விவசாயின் தோட்டத்தை காலி செய்தது, துணி துவைப்பவர்களின் துணிகளை எடுத்துச் செல்வது, நெல் விவசாயியின் வைக்கோல்போரை காலி செய்வது, துணி காய்க்கும் மரம் என்று ஏமாற்றுவது, பேராசை கிராமத்தில் கழுதையை வைத்து ஏமாற்றுவது என குழந்தைகளுக்கான காமெடி காட்சிகளை வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
"குண்டான்சட்டி" திரைப்படம்–சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்