விருதுகளை வென்ற இயக்குனர் ஸ்ரீராம்

விருதுகளை வென்ற இயக்குனர் ஸ்ரீராம்
-----------------------------------------------
திரைபடக்கல்லூரி மாணவரான இவர்
"டூ "படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.

 இவர் இதுவரை
 20 க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதில் Two Reels சார்பாக  தயாரித்த "ருசி கண்ட பூனை" குறும்படம் 20 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளது.

சமீபத்தில் இவர் இயக்கிய "சாயுப்பும் நானும்" எனும் குறும்படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் IFA நிறுவனமும் இணைந்து தயாரித்தது. 

இப்படம் பெங்களுர் உலக திரைப்பட விழாவில்  கலந்து கொண்டு சிறந்த ஒளிப்பதிவிற்கான பரிசை பெற்றது. 

 தகவல் ஒளிப்பரப்பு துறை இணை அமைச்சர் 
 திரு.ட.முருகன் அவர்கள் இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரன் சந்தரருக்கும் பரிசை வழங்கினார்..

மேலும் இந்த குறும்படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மூலம் கேன்ஸ பட விழாவுக்கு அனுப்பப்பட்டது.

இயக்குனர் ஸ்ரீராம் 
இதுவரை 6 சிறுகதைகளை எழுதிஉள்ளார. 

"465" என்ற படத்திற்கு வசனமும்
எழுதியுள்ளார்.

இப்போது தனது இரண்டாவது
படத்தின் கதையை
பிரபல தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறார். அதற்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்.
                   .......
வெங்கட் பி.ஆர்.ஓ

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்