சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?
சென்னையில் உலக திரைப்பட விழா உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது. உலக திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை? உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,&3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுசென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும் போது, 15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய அடவி என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது...