"லவ்" Love திரைப்பட விமர்சனம்

ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் "லவ்".

இதில் பரத், வாணி போஜன்,ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் அனே போப், சுவயம் சித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-பாடலாசிரியர் – ராஜா, இசையமைப்பாளர் – ரோனி ரஃபேல், எடிட்டர் -அஜய் மனோஜ்,ஒளிப்பதிவாளர் – பிஜி முத்தையா, பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

பணக்கார பெண்ணான வாணிபோஜன் .சொந்த தொழில் செய்து மிக பெரிய தொழில் அதிபராக போராடும் பரத்தை விரும்பி திருமணம் கொள்கிறார்பணக்கார பெண்ணான வாணிபோஜன் சொந்த தொழில் செய்து வெற்றி பெற போராடிக்கொண்டிருக்கும் பரத்தை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார் திருமணத்திற்கு பிறகு நிம்மதியாக வாழ்கிறார்கள் திவ்யாவின் அப்பா கொடுத்த அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள் ஒரு வருடம் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்கச் சொல்கிறார் பரத். ஆனால் பரத்தால் சொன்னபடி தொழிலில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறார், இதனிடையே இரண்டு மாத கர்ப்பத்தை தெரிவிக்க வீட்டிற்கு வரும் வாணிபோஜன் அங்கே பரத் குடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து கோபம் கொள்கிறார். வாய் சண்டை கைகலப்பில் முடிய பரத் வாணிபோஜனை தள்ளி விட தலையில் அடிபட்டு இறக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறையும் பரத் பாத்ரூமில் மனைவியின் இறந்த உடலை மறைத்து வைக்கிறார். அப்பொழுது பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா அங்கே வந்து தன் மனைவியும் அவருடைய நண்பரும் சேர்ந்த தன்னை ஏமாற்றுவதாகவும் அவர்களை பழி வாங்க வேண்டும் என்று புலம்பி தள்ளுகிறார். அவரை சமாதானப்படுத்தும் பரத், மனைவியுடன்  பேசுமாறு அறிவுரை கூறுகிறார்.   அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் பரத் குடித்து வைத்த பிராந்தி மிசச சரக்கைக ஊத்தி குடிக்கிறார்:இதனிடையே பரத்தின் இன்னொரு நண்பன் டேனியல் கள்ளக்காதலியுடன் வருகிறார். இவர்களை வீட்டிலிருந்து விரட்ட நினைக்கும் பரத்திற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறந்த மனைவி வாணி போஜன் உயிரோடு வீட்டிற்கு உள்ளே வருகிறார் அதேசமயம் விவேக் பிரசன்னா, டேனி இருவரும் காணாமல் போகிறார்கள். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. நண்பர்கள் இருவரும் காணாமல் போக என்ன காரணம்..உண்மையில் நடந்தது என்ன ? பரத் தன் கற்பனையில் நடந்த சம்பவங்களா? இறந்தது யார் பரத்தா? வாணிபோஜனா? என்பதே க்ளைமேக்ஸ்

இரண்டாம் பாதியில் தான் பாத், வாணி போஜன் இடையேயான உறவில் இருக்கும் சில உண்மைகள் தெரிய வருகிறது. டுவிஸ்ட்டுகள் இருக்கிறது. அது என்ன என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

நடிப்பு எப்படி? 


பரத் உடல் எடையை கூட்டி, அழகாக காட்சியளிக்கிறார். ஆனால் மனைவியை கொலை செய்த பயம் முகத்தில் இல்லாவிட்டாலும், உணர்வுகளிலாவது இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லாதது மைனஸாக உள்ளது. இவரும் வாணிபோஜனும் அசல் கணவன் - மனைவி சண்டையை கண் முன்னால் நிறுத்துகிறார்கள். அதிலும் வாணிபோஜன் இறந்துப் போன நிமிடத்திலும் அழகான கண் சிமிட்டா பொம்மையாக காட்சியளிக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் பாசமிகு தந்தையாக ராதாரவி கேரக்டர் நினைவில் நிற்கிறார் விவேக் பிரசன்னா, டேனி இருவரும் கொடுத்த கேரக்டருக்கு ஓரளவு கதை ஒட்டத்திற்ககு சரியாக இருந்தது இவர்களுடன் சுவயம் சித்தா படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.இசையமைப்பாளர் ரோனி ரஃபேல். எடிட்டர் - அஜய் மனோஜ், ஒளிப்பதிப்பாளர் - பிஜி முத்தையா ஒரே அபார்ட்மெண்ட்குள் நடக்கும் ஒரு வீட்டில் கதைகளத்தை சிறப்பாக அழகாக கொடுத்துள்ளார்.  திருமணத்தின் பின் ஒவ்வொரு வீட்டில் நடக்கும்  வாழ்க்கை ஏற்படும் பிரச்சனை  சரியாக புரிந்து கொள்ளமாள் விட்டு கொடுத்து போக மனமில்லாள் வாய் சண்டை ஆரம்பித்து கடைசியில்  கொலைகாரனாக ஆகிவிடுகிறான் ஒரு நொடியில் எடுக்கும் முடிவு அதனால் ஏற்பாடும் விபரீத விளைவுகள் பற்றி சொல்லும் படம் எமோஷனலாக நடக்கும் கிரைம்களுக்கு பின்னணியில் லவ் படத்தின் கதை நகரும் என எதிர்பார்த்தால் அது இல்லை .திரில்லர் நினைத்தால் அதுவுமில்லை இயக்குனர்.  ஆர்.பி.பாலா முயற்ச்சிகள் பாராட்டு

மொத்தத்தில்பரத்தின் *லவ்* 50வது படம் அதிக எதிர்பார்ப்புடன் பார்பவர்களுக்கு  கொஞ்சம் ஏமாற்றம் 



Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்