"இராக்கதன்" திரைப்பட விமர்சனம்

மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரிப்பில் இளம் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் இயக்கிய திரைப்படம் இராக்கதன்.

இதில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன்,  நிழல்கள் ரவி, காயத்ரி ரேமா , சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-மானஸ் பாபு ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு, பிரவீன் குமார் இசை, பாடல்கள் பாபு கிறிஸ்டியன் மற்றும் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன், இன்ப பிரகாஷ் கலைப் படைப்பு,ஸ்டண்ட் இயக்குனர் சரவெடி சரவணன், தண்டாயுதபாணி கிரியேட்டிவ் தயாரிப்பாளர், பிஆர்ஒ நிதிஷ் ஸ்ரீராம், ஜான் நரேஷ்.

அர்ஜூன், அலெக்ஸ், அனன்யா மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இதில் அர்ஜூனும் அனன்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜூன் மாடலாக வேண்டும் என்பதே கனவு லட்சியமாக இருக்கிறார். எந்த வேலைகளை செய்தாலும் நாட்டமில்லாமல் இருக்கிறார். இதனிடையே மாடலிங் பயிற்சி அளிக்கும் ஏஜேன்சியில் அழைப்பு வர மகிழ்ச்சியாக சென்னைக்கு பயணமாகிறார்.அங்கே ஏஜென்சி மேனேஜர் ஆஸ்டின் அர்ஜூனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்கிறார். மாடலிங் துறையில் எதிர்பார்த்து வந்தது எதுவும் நடக்கவில்லை எல்லாம் எதிர்மாரக நடைபெறுகிறது இவருடைய ஆசை கனவு சிதைக்கப்படுகிறது ஒரு நாள் ஊரில் இருந்த காதலி நண்பன் அலெக்ஸ் அர்ஜுனை  பார்ப்பதற்கு சென்னைக்கு வருகிறார்கள்  மாடலிங் ஏஜென்ஸி ஆபீஸ்ல விசாரிக்கிறார்கள் சரியான பதில் இல்லை அர்ஜூனை பார்க்க முடியாமல் தவிக்கும் அனன்யாவை  நீ ஹோட்டல் அறைக்கு போக சொல்லி அனுப்பி விட்டு அலெக்ஸ் அர்ஜூனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று உள்ளே செல்கிறார்.

மறு நாள் காலையில் அர்ஜூன்,ஆஸ்டின் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க, அலெக்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இந்த கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அஜ்மல் நியமிக்கப்படுகிறார். இவரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அர்ஜூனைப் பற்றியும், ஆஸ்டினைப்பற்றியும் தெரிந்து கொள்கிறார். மாடலிங் பயிற்சியில் என்ன நடந்தது? அஜ்மல் தெரிந்து கொண்ட ரகசிய தகவல்கள் என்ன? எதற்காக அர்ஜூன் கொலை செய்யப்பட்டார்? ஆஸ்டின் யார்? உண்மையான முகம் என்ன? அலெக்ஸ் உயிர் பிழைத்தாரா? நண்பனை கொன்றவர்களை பழி தீர்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் வம்சி கிருஷ்ணா சிறப்பாக செயல்படும் இன்ஸ்பெக்டராக அஜ்மலாகவும், விக்னேஷ் பாஸ்கர் பாதிக்கப்பட்ட மாடல் அர்ஜூனாக, தினேஷ் கலைசெல்வன் அவரது நண்பர் அலெக்ஸாகவும், ரியாஸ் கான் மாறுபட்ட வில்லத்தனமாக ஆஸ்டினாகவும்,  நிழல்கள் ரவி, காதலி அனன்யாவாக காயத்ரி ரேமா , மாடலிங் தொழிலதிபராக சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். மானஸ் பாபு ஒளிப்பதிவும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு படத்திற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர் பாராட்டு

மாடலிங் உலகில் வரும் அப்பாவித்தனம், மாயைகள் மற்றும் இறுதியில் ஏமாற்றம் ஆகியவற்றை முன்னணி நடிகர்கள் சுவாரஸ்யமாக சித்தரிக்கின்றனர். உணர்வுகள், நட்புகள், மோதல்கள் போன்றவற்றை திறம்பட சித்தரிக்கும் படம்.

இதுவரை யாரும் சொல்லாத கதைகளம் அருமை உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்