"சத்திய சோதனை"திரைப்பட விமர்சனம்.
சூப்பர் டாக்கீஸ் சார்பாக சமீர் பரத் ராம் தயாரிப்பில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம்ஜி – ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் “சத்ய சோதனை”.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: ஆர்.வி. சரண், எடிட்டர்: வெங்கட் ராஜன்,கலை இயக்குனர்: வாசுதேவன், பாடல் வரிகள்: வேல்முருகன், இசை: ரகு ராம். எம், பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி, பாடியவர்கள்: கங்கை அமரன், வீரமணி ராஜு, திவாகர், வசனங்கள்: வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா, வண்ணம்: அஜித் வெடி பாஸ்கரன், கலவை: ராஜா நல்லையா, மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
அருப்புக்கோட்டையில் உள்ள சங்குப்பட்டி கிராமத்தில் நடக்கும் கதைகளம்
படத்தின் ஆரம்பமே தங்க நகைக்கடை போல் உம்பு எல்லாம் தங்க நகை அணிந்தும் வரும் நபரை சொந்த பகை காரணமாக நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்கிறார்கள்
அந்த வழியே தன் வருங்கால மனைவியை பார்க்க வரும் பிரேம்ஜி அந்த சடலத்தை பார்க்க அந்த சடலத்திடம் இருந்த கடிகாரம்
மொபைல் மற்றும் மெல்லிய மெல்லிய தங்கச் சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்
கொலை செய்யத நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைய கொலை செய்யப்பட்டு இறந்தவர் நிறைய நகைகள் அணிந்திருந்த தெரியவரபிரேம்ஜி மீது பழி திரும்புகிறது.
இரண்டு காவல் நிலையங்கள் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில் இரு காவல் நிலையில் அதிகாரிகளும்
தங்நகை ஆபரணங்கள் மீது ஆசை கொள்கின்றனர்.
இறந்து போன ஆசாமியின் உறவினர்களும் அந்த தங்க நகை மீது ஆசை கொள்கின்றனர் .வழக்கு விசாரணை நீதிமன்றம் வருகிறது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இறுதியில் தொலைந்து போன நகைகள் பத்திரமாக மீட்டார்களா? பிரேம்ஜி என்ன ஆனார் ? நகையை யார் எடுத்தார்கள் என்பதே கிளைமேக்ஸ் !
படம் முழுவதும் நகைச்சுவை இயல்பாகவே நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நாம் பார்த்தது ரசித்தது: படிப்பறிவு இல்லாத அப்பாவியாக பிரேம்ஜி கதைக்கு பொருத்தமாக இருந்தது
நாயகி ஸ்வயம் சித்தா அழகு தேவதையாக இளம் நெஞ்சங்களை கவர்கிறார் :லஷ்மி.பாட்டி அசத்தல் நடிப்பு அவருக்கு ஒரு கை தட்டல் கொடுக்கலாம்: மகாதேவன், குபேரன் இரு காவல்துறை அதிகாரிகளும் காவல் நிலையத்தில் உதவியாளராக வரும் ஸ்பை ராமர் நடிப்பு சூப்பர்
இசக்கியாக முத்துப்பாண்டி, பிரதீப் மாமா செல்வராஜாக கர்ண ராஜா ஆகியோர் அனைத்து கிராமத்து மக்களாக வாழ்ந்து வந்தனர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு நடிப்பில் அசத்தியுள்ளனர் நீதிபதியாக ஞானசம்பந்தம், நீதிமன்றத்தில் அனைவருக்கும் அறிவுரை வழங்கி விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்குள் ஏற்படும் பல சிக்கல்களை யதார்த்தமாகவும் அதை சமயம் சிந்தனையை தூண்டும் வகையிலும் பேசி கவனம் ஈர்க்கிறார்.
வேல் முருகன் பாடல்கள் ரகுராமின் இசையில் இனிமை சேர்ப்பதோடு, தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது பாடல்கள் குறைவுதான் என்றாலும் நன்றாக இருக்கிறது பின்னணி இசை அற்புதம் ஒளிபதிவாளர்.V.சரண் கிராமத்தின் இயற்கை அழகையும் ,பொட்டல் காடுகளை தன் கேமராவால் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் .
எடிட்டர்: வெங்கட் ராஜன்,கலை இயக்குனர்: வாசுதேவன் ஆகியோர் காவல் நிலையம், நீதிமன்றம், பாட்டி வீடு, அழகாகவும் சரியாக கொடுத்து இருக்கிறார்
கிராம வட்டார மொழி வசனம் நேர்த்திய மிக சிறப்பு :கிடாவின் கருணை மனு திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டு பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா .இப்படம் சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை மட்டுமே பிரதானமாக வைத்து ஒவ்வொரு காட்சி வித்தியாசம் செய்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது பாராட்டு:
இப்படம் அனைவரும் பிடிக்கும் குடும்பத்துடன் பார்கக வேண்டிய படம்