பாயும் ஒளி நீ எனக்கு – திரைப்பட விமர்சனம்
இந்தப் படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அத்வைத் தயாரித்து, படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தல்லி தனஞ்செயா, ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – கார்த்திக் அத்வைத், வெளியீடு – எஸ்.பி.சினிமாஸ், ஒளிப்பதிவு – தர், இசை – சாகர், படத் தொகுப்பு – பிரேம்குமார், கலை இயக்கம் – சுபேந்தர், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – தாதிதா, சண்டை இயக்கம் – தினேஷ் காசி, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எய்ம்).
பார்வை குறைபாடுடைய ஒருவன் தனக்கு நேர்ந்த கொடுமை எப்படிபழி தீர்க்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம் அமைத்து உள்ளது
.யில் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு பார்வையில் குறைபாடு உண்டு. அதிகமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவரால் சரி வர பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். இரவு வெளிச்சத்தில் பாதியளவு மட்டுமே அவர் கண்களுக்குத் தெரியும்.
சிறு வயதிலேயே இவரை வளர்த்து வரும் சித்தப்பா ஆனந்த், விக்ரம் பிரபுவுக்கு அவருடைய குறைபாட்டை பற்றி நினைக்காமல் “உன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்…” என்று சொல்லி சொல்லி தன்னம்பிக்கை வளர்த்திருப்பதால் இப்போது தன்னுடைய பார்வை குறைபாடு பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் இரவு டாஸ்மாக் கடைக்கு அருகேயிருக்கும் சந்தில் ஒரு பைத்தியக்கார, பிச்சைக்கார பெண்ணுக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் விக்ரம் பிரபு. இந்த விவகாரம் சங்கிலி தொடர்போல பல பிரச்சினைகளுக்குள் விக்ரம் பிரபுவை இழுத்து விடுகிறது.
தன்னுடைய தங்கை திருமணத்திற்கான டெக்ரேஷனுக்காக அந்த வேலையை செய்து வரும் வாணி போஜனை சந்திக்கிறார் விக்ரம் பிரபு. வழக்கம்போல பார்த்தவுடன் லவ்வாகி இருவரும் அடுத்து தங்களுடைய திருமணத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த நேரத்தில் திடீரென்று விக்ரம் பிரபுவின் சித்தப்பா கொல்லப்படுகிறார். இந்தக் கொலைக்கும் தனக்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதாக விக்ரம் பிரபு சந்தேகிக்கிறார்.
இன்னொரு பக்கம், ஆளும் கட்சியின் தலைவரான வேல ராமமூர்த்தியின் வளர்ப்பு மகன் தனஞ்செயா. அப்பாவுக்குப் பிறகு தான்தான் அரசியல் வாரிசாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். கொலைகளுக்கு அஞ்சாதவர். இவரும் ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன்னுடைய சித்தப்பாவின் கொலை சம்பவத்தில் தனஞ்செயாவுக்கும் தொடர்பு இருப்பதாக விக்ரம் பிரபுவுக்கு சந்தேகம் வருகிறது.
இந்த சந்தேகத்தைத் தொடர்ந்து பயணிக்கும் விக்ரம் பிரபுவுக்கு யார் எதிரிகள் என்பதே தெரியாத வகையில் எதிர்ப்புகள் ஏற்படுகிறது. இந்த எதிர்ப்புகளையெல்லாம் விக்ரம் பிரபு தாண்டினாரா..? அவருடைய சித்தப்பா கொலைக்கு என்ன காரணம்..? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்தப் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம்..!