உலக யோகா தினத்தை முன்னிட்டு திரைப்பட இசை கலைஞர்கள் இசையமைப்பாளர் தினா மற்றும் ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா வகுப்பு சென்னையில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவரும். பெப்சி துணைத் தலைவருமான இசையமைப்பாளர் தினா மற்றும் ஈஷா அறக்கட்டளை  சார்பில் சிறப்பு யோகா வகுப்பு சென்னையில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்னிகா யோகா ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் திரு. வேல்முருகன், பாடகி ரணினா ரெட்டி உள்ளிட்ட இசை கலைஞர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட நாடி சுத்தி மற்றும் ஈஷா கிரியா பயிற்சிகள் காணொளி மூலம் நடத்தபட்டன.

இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் யோகா குறித்து தான் எழுதிய பாடலை பாடினார். அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் கலைமாமணி தினா சிறப்புரையாற்றினார். யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், சத்குரு அவர்கள் ஆற்றி வரும் பணிகள் அனைத்தும் பாரத பிரதமர் மோடி அவர்களின் யோகா மீதான நம்பிக்கை பற்றியும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியை பாடகி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்