"குலசாமி" திரைப்படவிமர்சனம்

MIK புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் வெளியீட்டில் விமல் தான்யா ஹோப் , வினோதினி, வினோதினி, கீர்த்தனா நடிப்பில் விஜயசேதுபதியின் வசனத்தில் சரவண சக்தி இயக்கி இருக்கும் படம். 

 குடிப்பழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் உடைய ஓர் இளைஞன் ( விமல்) நன்றாகப் படிக்கும் தன் தங்கையை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க , தன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிறான். ஆட்டோ ஓட்டி சம்பாதித்துப் படிக்க வைக்கிறான் . 

மருத்துவ கல்லூரில் 
பணம் கட்ட வசதி இல்லாத மாணவிகளை மயக்கி பாலியல் தொழில் தள்ளப்பட்டு பல்வேறு நபர்களுக்கு விருந்து வைக்கிறார் ஒரு ஆசிரியை. (வினோதினி). பணம் போதாத நிலையில் தங்கையும் அந்த ஆசிரியையிடம் உதவி கேட்க, 
ஒரு நிலையில் தங்கை பிணமாகக் கிடக்கிறாள். 

நாயகன் பெரும் அதிர்ச்சி குள்ளாகிறான் குடிகாரணாக நடைபிணமாக வாழ்கிறான் சம்மந்தப்பட்ட கும்பலை ஒழித்துக் கட்ட முயற்ச்சி என்ன நடக்கிறது என்பதே படம். 
 
சமீபத்தில் ஒரு கல்லூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகளம் இப்படம்
 
இப்படத்தின் நாயகன் விமல் தங்கை பாசமாக வாழ்ந்து இருக்கிறார்  சண்டை காட்சி மிரட்டி உள்ளார்  நாயகன் சிறப்பாக நடித்துள்ளார்

கதாநாயகி தான்யஹோப் தன் கதாபாத்திரம் சிறப்பு நடித்திருக்கிறார்
இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

இப்படத்தின் இயக்குனர் சரவண சக்தி அவர்கள் கதைசொல்ல வந்ததை தடுமாற்றத்துடன் முடித்து இருக்கிறார் அவர் முயற்சிக்கு பாராட்டு

ஒளிப்பதிவாளர்/ இசையமைப்பாளர் /எடிட்டர் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்

இப்படத்தின் இறுதி காட்சி யாரும் எதிர்பார்க்காத காட்சியாக அமைந்துள்ளது  இயக்குனர்க்கு பாராட்டு

இப்படம் அனைவரும் பார்க்கும் படமாக அமைந்தது

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்