கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் :
டி.இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு AIM.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்திலும் மூர்க்கனின் காதலியாக வந்து அதட்டல், உருட்டல், மிரட்டலிலும், தெனாவெட்டு காட்டி காதல் காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார்.
அரசியல் கலந்த சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளராக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ராஜசிம்மன், குடும்பத்தை விட பதவி, சாதி தான் முக்கியம் என்ற எண்ணம் கொண்ட மூர்க்கனின் அப்பாவாக யார் கண்ணன், உண்மை மாமாவாக முனிஷ்காந்த், சில காட்சிகள், சில வசனங்கள் மூலம் கை தட்டல் பெறும் மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, முரட்டு இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் காதலியாக சாயாதேவி, ஜக்குபாண்டி மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் கதையின் தூண்களாக இருந்து படத்தை மெருகேற்றியுள்ளனர்.
இராமநாதபுரத்தின் இயற்கை சூழல், கிராமத்தில் நடக்கும் சாதி வேற்றுமை, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்கள், கருவேல மரங்கள், அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள், இறுதி கழுமரத்தின் தண்டனை காட்சிகள் என்று பார்த்து பார்த்து தன்னுடைய காட்சிக் கோணங்களால் சிறந்த படைப்பை செதுக்கி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
பவர் பேக்ட் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும், அதிரடியையும் ஒரு சேர கொடுத்து கணேஷ் குமார் மிரட்டியுள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதி படபடப்பை கூட்டியுள்ளார். கலை-மகேந்திரன் பாண்டியன் சிறப்பாக செய்துள்ளார்.
யுகபாரதியின் பாடல் வரிகளில் டி இமானின் இசையும் கலந்து காதுகளுக்கு விருந்து கொடுத்துள்ளனர். பின்னணி இசை அதிரடி காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது
உயிர் நண்பர்கள் வாழ்க்கையில் சாதி அரசியல் களமிறங்க அதனால் ஏற்படும் பிரச்சனை, கலவரம், பழி வாங்குதல் பற்றிய திரைக்கதையுடன் கொஞ்சம் காதல் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். முதல் பாதி மெதுவாக செல்ல இரண்டாம் பாதியில் தான் படத்தை தூக்கி பிடித்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். ஜாதி அரசியல்,ஜாதி பாகுபாடு, போஸ்டர் கிழிந்து அம்மேத்கர் சிலை தெரியும் காட்சிகள், பிணத்தை அம்பேத்கர் சிலை அருகே வைத்துவிட்டு ஒடும் காட்சிகள், போலீஸ் விசாரணை, போலீஸ் மேலதிகாரியின் பார்வையில் விசாரிக்கும் காட்சிகள், அக்காலகட்ட பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கோயில் கழுமரத்தின் கதை, இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் மற்றும் வில்லனுக்கு கொடுக்கும் தண்டனை, ஜாதி வெறி பிடித்த போலீஸ் டிரைவர் துணிந்து செய்யும் செயல் என்ற பதற வைத்து அதிர வைத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கௌதமராஜ்.
உயிர் நண்பர்கள் வாழ்க்கையில் சாதி அரசியல் களமிறங்க அதனால் ஏற்படும் பிரச்சனை, கலவரம், பழி வாங்குதல் பற்றிய திரைக்கதையுடன் கொஞ்சம் காதல் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். முதல் பாதி மெதுவாக செல்ல இரண்டாம் பாதியில் தான் படத்தை தூக்கி பிடித்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். ஜாதி அரசியல்,ஜாதி பாகுபாடு, போஸ்டர் கிழிந்து அம்மேத்கர் சிலை தெரியும் காட்சிகள், பிணத்தை அம்பேத்கர் சிலை அருகே வைத்துவிட்டு ஒடும் காட்சிகள், போலீஸ் விசாரணை, போலீஸ் மேலதிகாரியின் பார்வையில் விசாரிக்கும் காட்சிகள், அக்காலகட்ட பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கோயில் கழுமரத்தின் கதை, இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் மற்றும் வில்லனுக்கு கொடுக்கும் தண்டனை, ஜாதி வெறி பிடித்த போலீஸ் டிரைவர் துணிந்து செய்யும் செயல் என்ற பதற வைத்து அதிர வைத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கௌதமராஜ். பாராட்டவேண்டும்
மொத்தத்தில் கழுவேத்தி மூர்க்கன் சாதி அரசியலுக்கு ஒரு சாட்டை அடி