*பத்துதல *திரைப்படத்தின் விமர்சனம்
கதைக்களம்
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஏ.ஜி. ராவணன் {சிம்பு } ஆண்டு வரும் ஆட்சியை தகர்த்தெறிய பல முயற்சிகள் நடக்கிறது. துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனனும் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக ஏ.ஜி. ராவணனின் கோட்டை கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அங்கு ஏற்கனவே ஏ.ஜி.ராவணனின் மணல் கொள்ளையை தடுக்க பிரியா பாவனி ஷங்கர் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் கவுதம் கார்த்திக்கும் அங்கு வருகிறார்.
ஏ.ஜி. ராவணனின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்ததுடன் நிறுத்தாமல், அவருடைய நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார் கவுதம் கார்த்திக். இதனால் ஏ.ஜி. ராவணன் கவுதம் கார்த்திக்கிற்கு மட்டும் தன்னுடைய மனதில் இடத்தை கொடுக்கிறார்.
இதன்பின் ஏ.ஜி. ராவணன் பக்கம் வரை சென்ற கவுதம் கார்த்திக் ஏ.ஜி. ராவணனுக்கு எதிரான ஆதாரங்களை எப்படி திரட்டினார். ஏ.ஜி. ராவணனை கொலை செய்ய முயற்சி செய்து வரும் கவுதம் மேனனின் வலையில் ஏ.ஜி. ராவணன் சிக்கினாரா? உண்மையிலேயே ஏ.ஜி. ராவணன் யார் என்பது தான் படத்தின் மீதி கதை..
ஏ.ஜி. ராவணனாக வரும் சிலம்பரசன் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தை சிம்பு தாங்கிய விதம் பாராட்டுக்குரியது. கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.
வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல்வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல்வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த கதாநாயகி கதாபாத்திரத்தை இதில் அருமையாக வேறொரு கோணத்தில் வடிவமைத்து அதில் பிரியா பவானி ஷங்கரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. அதை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
இவர்களை தவிர்த்து டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, மது குருசாமி, சென்றாயன் என அனைவரும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி தொய்வு இல்லாமல் செல்ல சிம்புவின் நடிப்பு காரணமாக இருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ். குறிப்பாக இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலமாக அமைத்துள்ளது. அதே போல் ஸ்டண்ட் மற்றொரு பிளஸ் பாயிண்ட். மேலும் சிம்புவிற்கு எழுதிய மாஸ் வசனங்கள். அதுமட்டுமின்றி அரசியல் குறித்து பேசப்பட்ட வசனங்களும் அருமை. எடிட்டிங் முதல் பாதியில் சில தொய்வு, மற்றபடி பக்கா.
பிளஸ் பாயிண்ட்
சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பு
கவுதம் மேனன்
பின்னணி இசை
மஃப்ட்டி படத்தின் ரீமேக் என்றாலும், புதிய திரைக்கதையை வடிவமைத்த விதம் mass
ஆக்ஷன் காட்சிகள்
மொத்ததில்* பத்துதல* பக்காமாஸ்