*முந்திரிக்காடு *திரைப்பட விமர்சனம்.

‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் சீமான் ‘அன்பரசன்’ என்ற போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். மற்றும் ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் கலைசேகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்து – இயக்கம் – மு.களஞ்சியம், இவர்.பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘பூந்தோட்டம்’,  ‘மிட்டா மிராசு’போன்ற படங்களை இயக்கி உள்ளார்,  இசை – ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாசன், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், பாடல்கள் – கவி பாஸ்கர், இளைய கம்பன், நிழற்படம் – தஞ்சை ரமேஷ், மூலக்கதை – எழுத்தாளர் இமையம், பத்திரிகை தொடர்பு – புவன், வரைகலை – பவன்குமார், தயாரிப்பு – ஆதி திரைக்களம் .எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்ற சிறுகதையை அடித்தளமாகக் கொண்டு இந்த ‘முந்திரிக்காடு’ படம் உருவாகியுள்ளது. 2018-ம் ஆண்டே இந்தப் படம் தயாராகி சென்சார் வாங்கியிருந்தாலும், 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது..

முதல் காட்சி சீமான் காவல்துறை அதிகாரியாக முந்திரிக்காடு நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தி ஒரு பேப்பர்ல எழுத தொடங்கி தலைப்பு முந்திரிக்காடு எழுதிமுடிக்க படம் தொடங்குகிறது  கிராமங்களில் உள்ள – காதல் கல்யாணத்துக்கு எதிராக உள்ள சாதி வெறியால்-  பலர்  கொடூரமாக கொல்லப்படுகின்றனர் . இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண் ஒருத்திக்கும்  (சுபப்ரியா)  காவலர் பயிற்சிக்குப் போக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி  இளைஞனுக்கும் (புகழ்) இருக்கும் நட்பை காதலாக நினைத்து பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்கள் இருவருக்கும் பல விதமான கொடுமைகள் செய்ய , அது உண்மைக் காதலாகவே மாற, மேலும் கொடுமைகள் தொடர என்ன நடக்கிறது என்பதே படம். 
வழக்கை விசாரித்த காவல் அதிகாரியின்  (சீமான்) ஆரம்பம் தொடங்கி சில காட்சிகள் வந்தாலும் பயணிக்கும் படம், நடந்ததையும் உண்மை சம்பவத்தை காவல் அதிகாரி நடக்க வேண்டும் என்று விரும்பியதையும் சொல்லும் இடத்தில் பாராட்டுப் பெறுகிறது. 
 
காதலர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகளை அழுத்தமாகப் படமாக்கி இருக்கிறார் களஞ்சியம் . புகழ், சுபப்ரியா மிக சிறப்பாக நடித்துள்ளனர் .சுபப்ரியாவின் நடிப்பு வாழ்ந்துள்ளார் குரலும் உணர்வுப் அருமை . 
 காட்சிகளுக்கு ஏற்ப கனலும் ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சிவ சுந்தர் 
 
அடுத்தடுத்து திருப்பங்களுடன் பயணிக்கிறது படம். 

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்