நடிகர் சிபியின் ஜோடியாக மனிஷா தமிழ்திரை உலகிற்கு அறிமுகமாகிறார்...
நடிகை மனிஷா இவர் பிறந்த ஊர் கும்பகோணம். இவர் கலாச்சேத்ரா மற்றும் கலா மண்டலத்தில் பரதநாட்டியத்தை கற்று தேர்ந்தவர்.
அதுமட்டுமல்ல நடனத்தில் டாக்டர் பட்டமும், தேசிய விருதும், மாநில விருதும் பெற்றவர். நடனத்தில் உள்ள ஆர்வத்தின் அடுத்த கட்டமாக நடிகை பத்மினி அம்மா அவர்களின் மீது உள்ள ஈர்ப்பினாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தன் திறமைகளை இவ்வுலகத்திற்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது ஜாக்சன் துரை 2 திரைப்படத்தில் 1940 இல் வரும் கதையில் நடிகர் சிபியின் ஜோடியாக மனிஷா தமிழ்திரை உலகிற்கு அறிமுகமாகிறார்...
நடிகர் சிபி பற்றி கேட்டதற்கு நடிகர் சிபி மற்றும் அவருடைய அப்பா நடிகர் சத்யராஜ் சாரும் ரொம்ப ஸ்வீட்,கருணை உள்ளம் கொண்டவர்கள் அது மட்டுமல்ல மிகுந்த திறமைசாலிகள் என்று கூறினார்...
என்னுடைய முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நடிகர்களோடு நடிப்பதில் சந்தோஷம் என்றும் இதற்கு இயக்குனர் தரணிதரன் சாருக்கு தான் நன்றி சொல்லணும் என்றும்
கூறினார்...
அடுத்தடுத்து குடும்ப பாங்கான படங்கள் மற்றும் பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாகவும் எந்த நடிகரோடு நடித்தாலும் தன் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்....