*பியூட்டி *திரைப்பட விமர்சனம்:

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் பியூட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா.
இப்படத்தில் ரிஷி,  கரீனா , காயா கபூர், ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- ஆர்.தீபக் குமார்,இசை -இலக்கியன், பாடல்கள்-வெ.இறையன்பு, தமிழ் முருகன், எடிட்டிங்-சங்கர்.கே, நடனம்-கூல் ஜெயந்த், சண்டை- ஃபயர் கார்த்திக், கலை-ரவிவர்மா, பிஆர்ஒ- கிளாமர் சத்யா.

வங்கியில் வேலை செய்யும் ரிஷிக்கு அழகான பெண்களை பார்த்தாலே வெறுக்கும் மனநிலை குணத்தோடு வளர்ந்தவர். அழகில்லாத பெண் அல்லது மாற்றுதிறனாளி இருக்கும்  பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தந்தையின்  ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார். வங்கிக்கு வரும் கரீனா ஷாவை பார்க்கிறார். கரீனா முகம் தீயினால் பாதிக்கப்பட்டிருக்க, அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு காதலிக்க தொடங்குகிறார். இதனிடையே  கரீனா தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்து அழகாக்குகிறார். ரிஷியிடம் மகிழ்ச்சியாக கரீனா இந்த விஷயத்தை சொல்ல வருகிறார். கரீனாவை பார்த்ததும் அதிர்ச்சியாகிறார்  ரிஷி தன் காதலி கரீனாவின் முகத்தை சிதைக்க  பல கோணத்தில் திட்டங்கள் போடுகிறார் இவரின் சதி திட்டத்தை தெரிந்து கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் டாக்டர், கரீனாவை காப்பாற்ற முயல்கிறார். இறுதியில் ரிஷியின் அப்பா ஆசை நிறைவேற்றினாரா ? டாக்டர், கரீனாவை காப்பாற்றினாரா? ரிஷி ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? தந்தையின் கடந்தகாலத்தில் நடந்தது என்ன? ரிஷி மனதில் ஆழமாக பாதிக்கப்பட காரணம் என்ன? ரிஷியின்  கொடூர குணத்தை தெரிந்து கொள்ளும் கரீனா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரிஷி கிராமத்து பண்ணை தந்தையாகவும், நகரத்து மகனாகவும் மாறுபட்ட இரு வேடங்களில் நடத்துள்ளார்  தந்தையின் சொல்லை மீற முடியாமல், காதலியையும் விட்டு பிரிய மனமில்லாமல் தவிக்கும் நடிப்பு வித்தியாசத்தை காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அழகான மாடர்ன் பெண்ணாகவும், விபத்தில் தழும்புடன் காதலியாகவும், கரீனா ஷா மகிழ்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தி இறுதியில்  காதலனின் மனதை மாற்றும் விதம் யாரும் எதிர்பாராத  படத்தின் முக்கிய அம்சமாக இருந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து அனைவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இவர்களுடன் நடித்த நடிகர் சிறப்பு

தயாரித்து, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர். தீபக்குமார் காட்சிக் கோணங்கள் கச்சிதம் மற்றும் வெ.இறையன்பு, தமிழ் முருகன் ஆகியேரின் பாடல்களை கேட்கும்படியாகவும் ரசிக்கும் ரசிக்கும் படியாக  கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இலக்கியன்.

எடிட்டிங்-சங்கர்.கே, நடனம்-கூல் ஜெயந்த், சண்டை- ஃபயர் கார்த்திக், கலை-ரவிவர்மா அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களின் பணி சிறப்பாக இருந்தது . இயக்குனர் கோ.ஆனந்த் சிவா புதிய கதைகளத்துடன் திரைகதை எழுதி இயக்கிய உள்ளார் அவருடைய முயற்ச்சிக்கு பாராட்டு

அழகு வெளிதோற்றத்தில் அல்ல, உள்மனத்தோற்றத்தில் தான் உள்ளது என்பதையும், அழகு ஆபத்தானது என்பதை நம்பும் இளைஞனை மாற்றி அவனின் மனஅழுத்தத்தை போக்கி திருந்தும் வகையில் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கோ.ஆனந்த் சிவா.

மொத்தத்தில்   பியூட்டி அழகு ஆபத்தானது அல்ல என்பதை மென்மையாக அழாக காதல் படம்.


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்