*நான் கடவுள்* இல்லை திரைவிமர்சனம்:
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பருத்தி வீரன் சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, தியான ஸ்ரீஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – மகேஷ் கே தேவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்கம் – வனராஜ், மக்கள் தொடர்பு – சக்திசரவணன்.
போலீஸ் சிஐடி அதிகாரி செந்தூரபாண்டியாக சமுத்திரகனி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து கம்பீரமான தோற்றத்துடன், அதிகாரத்துடன் வலம் வருகிறார். குற்றவாளியை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கைகள், எதிரிக்கு தெரிந்துவிடுகிறது இவர் குற்றவாளியை பிடிக்க நெருங்கும் போது அவன் தப்பிவிடுகிறான் :இது எப்படி யாரால் நடக்கிறது கண்டுபிடிக்க வியூகம் அமைக்கிறார் தன்னிடம் பணிபுரியும் போலீஸ் குற்றவாளிக்க உதவி செய்வதை கண்டறிந்தார் அடுத்தது குற்றவாளியை பிடிக்க வியூகம் அமைத்து, தன்னந்தனியாக இருந்து சாதித்து காட்டுவதில் அனைவரின் நம் மனதில் இடம்பிடிக்கிறார்
இனியா அன்பான மனைவி, மகளுக்கு பாசமான தாயாக முத்திரை பதிக்கிறார்.
சமுத்திரக்கனியின் உதவியாளராக வரும் சாக்ஷி அகர்வால், குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் தூள்கிளப்புகிறார் சிறப்பாக நடித்து கவர்ச்சியிலும், அழகிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்
கொடூர வில்லனாக சரவணன் வேறவொரு பரிமாணத்தை நடிப்பில் அசத்தி வெளிப்படுத்தியிருக்கிறார் தன் கண்களிலேயே ஆக்ரோஷத்தை காட்டி மிரள வைத்து ரத்தவெறி பிடித்த மிருகமாக மிரள வைக்கிறார்
இப்படத்தில எஸ் ஏ சந்திரசேகர் தனது அனுபவமிக்க நடிப்பால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரின் மனதிலும் இடம்பிடிக்கிறார் மகத்தான உதவி செய்யும் ‘கடவுள்’ கதாபாத்திரத்தின் இவருக்கு பொருந்துகிறது மற்றும் அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, தியான ஸ்ரீ ஆகியோர் படத்தின் கதைக்கேற்ப நன்குதேர்ந்தெடுக்கப்பட்டு -ள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் மகேஷ் கே .தேவ் ஒளிப்பதிவு படத்தின் அதிரடி சண்டை காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கும் பாணியுடன் படம் பிடித்து உள்ளார் திரைக்கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை நேர்த்தியாக கொடுத்துகாட்சிக்கோணங்களில் அசத்தியுள்ளார்.
சித்தார்த் விபின் படத்திற்கேற்றவாறு பொருத்தமாகவும், வித்தியாசமாகவும் இசையமைத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகள் தான் படத்தின் உயிர் நாடி. அதனை திறம்பட கையாண்டு மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர்.எடிட்டர்: பிரபாகர் மற்றும் பிஜு டான் போஸ்கோ, கலை இயக்குனர்: வனராஜ் இவர்களின் பங்களிப்பு இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்தது .
படம் ஒட்டுமொத்தமாக விஜயகாந்த் நடித்து சட்டம் ஒரு இருட்டறை ,அதற்கடுத்த அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களின் உணர்வைக் கொண்டுள்ளது. உண்மையான புலனாய்வு வேலைகளை விட உணர்ச்சிகரமான காட்சிகளில் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் குறிக்கிடும் குற்றவாளியை தேடி வேட்டையாடும் கதைக்களத்தில் குடும்ப செண்டிமென்ட், பகை, சமூக அக்கறை கலந்து திறம்பட அனுபவத்தோடு இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம் குடும்பத்துடன் பார்க்கலாம்