*பொம்மை நாயகி *திரை விமர்சனம்.

பொம்மை நாயகி
 திரை விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஷான். இந்த படத்தில் யோகி பாபு, சுபத்ரா, ‘மெட்ராஸ்” ஹரி கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி, ஜி.என்.குமார், அருள்தாஸ், விசி ஆண்டனி, கேலப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் :தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு அதிசயராஜ், இசை - சுந்தரமூர்த்தி
எடிட்டிங் - செல்வா  RKகலை- ஜெயரகு பாடல்கள் , கபிலன், அறிவு , லோகன், சித்தன் ஜெயமூர்த்தி, சவுண்ட் - அந்தோனி ஜே ரூபன்.சண்டைபயிற்சி ஸ்டன்னர் சாம். உடைகள் ஏகாம்பரம்.இணை தயாரிப்பு.
வேலன், லெமுவேல்

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் கதையே பொம்மை நாயகி. 

கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் ( யோகிபாபு) வேலு. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை பெயர் பொம்மை நாயகி. 9வயது சிறுமியான பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால்  (உறவுகாரர் உடந்தை )பாலியல் வன்கொடுமைக்கு சீண்டலில் தள்ளப்படுகிறார்  ஊர்க்காரர்கள், காவல் துறை அதிகாரி, .அண்ணன் சமாதான முயற்சியில் ஈடுபட இதை விரும்பாத வேலு தனக்கு நீதி வேண்டும் ஒரே முடிவாக இருக்கிறார் நண்பர் உதவியுடன் சமூக ஆர்வலர்கள் சிலரால் நீதிமன்றத்தை நாடுகிறார். குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது .மீண்டும் குற்றவாளி இரண்டு வருடம் கழித்து சிறையிலிருந்து வெளியே வருகிறார்  யோகிபாவுக்கு மீண்டும் பிரச்சினை வருகிறது. வேலு அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? பிரச்சினையில் இருந்து விடுபட வேலு எடுத்த முடிவு என்ன என்பதே பொம்மை நாயகி.

வேலுவாக யோகி பாபு சரியான பொருத்தமான கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் கிடைத்திருக்கும் அற்புதமான நடிகர் அப்பா தன் மகளுக்காக வாழ்ந்து இருக்கிறார். படம் முழுவதும் எங்குமே அவர் சிரிக்கவில்லை. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார். சீரியஸான கதை என்பதால் கதைநாயகனாக வாழ்ந்து இருக்கிறார் இவருக்கு தேசிய விருதும் கிடைக்கலாம்' . யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான குடும்ப உறவு திரையில் ரசிக்க வைக்கிறது. அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் நடிப்பு சிறப்பு சமூக சிந்தனை புரட்சி  பெண்ணாக பாட்டு பாடி  வரும்போது ரசிக்கும் படியாக இருந்தது இவர் வயது முதிர்ந்தாலும் நடிப்பு தளரவில்லை தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குனர். சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். படத்தில் வரும் வசனங்கள் சாட்டை அடியாக இருந்தது. பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற, தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார் போன்ற வசனங்கள் அருமை. உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும்  அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பாளர் நிறுவனம் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது.பாராட்டுக்கள்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்