*வாத்தி* திரைப்பட விமர்சனம்:
இதல் தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், தனிகல பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, கென் கருணாஸ், பிரவீணா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், சுமந்த், சாரா, பவிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஓளிப்பதிவு: ஜே யுவராஜ்,கதை: நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா, சண்டைக்காட்சிகள் – வெங்கட், பிஆர்ஒ-ரியாஸ் கே.அஹமது.
முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாடக்கியது. அதை தாண்டி இப்படத்தின் வா வாத்தி பாடல், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இப்படத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அப்படி ரசிகர்கள் இப்படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தாரா? வாத்தி? பார்க்கலாம். வாங்க
கதைக்களம்
90களில் அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் அதிக ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்தி வருகிறது. அரசாங்க பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமுத்திரக்கனியின் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனுஷ் {பாலமுருகன்} சோழவரம் எனும் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு ஆசிரியராக சமுத்திரக்கனியால் {திருப்பதி} அனுப்பிவிடப்படுகிறார்.
தனுஷ் மட்டுமின்றி பல தனியார் பள்ளிகளில் இருந்து பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசாங்க பள்ளிகளுக்கு ஆசிரியராக செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணியாற்றுபவர்கள் என்பதால், இவர்களால் அரசாங்க பள்ளிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் வராது என்று எண்ணத்தில் சமுத்திரக்கனி இதை செய்கிறார்.
சோழவரம் அரசாங்க பள்ளியில் கணக்கு வாத்தியாராக பணியாற்ற வரும் தனுஷ் அங்கு கதாநாயகி சம்யுக்தாவை {மீனாட்சி} சந்திக்கிறார். சம்யுக்தாவை சந்தித்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு செல்லும் தனுஷுக்கு அங்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. ஊரில் உள்ள மாணவர்கள் பலர் பத்தாம் வகுப்பு படித்துமுடித்தபின் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இதை பார்த்ததும் தனுஷ் பெரும் அதிர்ச்சி ஆகிறார் மாணவா்களின் வீட்டு நேரடியாக சென்று பள்ளிக் மாணவர்களை அழைக்க மாணவர்களின் அப்பா, அம்மா பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்: இந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்களை மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள் எப்படி இது நடந்தது :
தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு. இந்த கதை ரொம்ப பழையது தான் என்றாலும் அதை கையாண்ட விதம் தான் அருமை. பழைய கதையை தற்போது உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்று கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. பாராட்டுகள்
படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் தனுஷ். பாலாவாகவே வாழ்ந்திருக்கிறார். மாணர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியா யுத்திகள் ரசிக்கும்படி இருக்கிறது. ஒரே வகுப்பில் இரு சாதியினர் ஒன்றாக உட்கார்ந்து படிப்பதில் சாத்தியம் இல்லை இரு சாதி மாணவ பிள்ளைகளை தனிதனியாக வேறே வேற பாடம்ங்களை சொல்லிக் கொடுத்தார் மறுநாள் மாணவர்களுக்கு பரீட்சை எழுதவேண்டும் மாணவர்களுக்கு அதிர்ச்சி குழப்பம் நடத்திய பாடத்தின் தலைப்புகள் வேற இந்த இடத்தில் யாரும் எதிர்பாரத காட்சியமைப்பு நம்மனத்தில் நீங்க இடம்பிடித்தது
சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. கென் கருணாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற மாணவர்களின் நடிப்பையும் பாராட்ட வேண்டும்.வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு தன் வில்லத்தனத்தை தமிழ் சினிமாவில் எடுபடவில்ல எடுபடாது படத்தின் (மைனஸ் ). பாரதிராஜா ஒரு காட்சி வந்தாலும் அசத்திவிட்டார் அவருக்கு அதிக காட்சி கொடுத்திருக்கலாம் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பக்கபலம் ஆகும். வாத்தி- குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.