Skip to main content

*மெய்ப்பட செய். *திரை விமர்சனம்


ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் கதை, வசனம், திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய்.
இதில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி, மதுனிகா, தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன், விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை-பரணி, ஒளிப்பதிவு-ஆர்.வேல், பாடல்கள்-பரணி, உமாதேவி, வேலன், எடிட்டர்-கேஜே.வெங்கட்ரமணன், கலை-கிருஷ்ணமூர்த்தி, சண்டை-மிரட்டல் சிவா, நடனம்-தீனா, உடை-தனபால், பிஆர்ஒ-சுரேஷ் சுகு, தர்மதுரை.

தஞ்சை உள்ள ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்களுடன் வேலையில்லாமல் ஊர் சுற்றுகிறார் ஆதவ் பாலாஜி. இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் மதுனிகாவுக்கும் காதல் மலர இருவரும் தெரியாமல் சந்தித்து கொள்கிறார்கள். இவர்கள் காதலை மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வம் அறிந்து மதுனிகாவின் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார் மற்றும் இவர்களின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் இவர்களுக்கு தெரியாமல் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு நண்பர்கள் மூன்று பேருடன் ஊரை விட்டு வெளியேறி சென்னை வருகிறார்கள். சென்னையில்  வீட்டு புரோக்கர் மூலம் வீடு வாடகை போகிறார் வீட்டு புரோக்கர்  பிரபல ரவுடியின் வீட்டை வாடகைக்கு  அமர்த்தி கொடுக்கிறார் குடியிருக்கும் . அந்த வீட்டில் பின்பகுதியில் பிணம் புதைத்து இருப்பதைப் பார்த்து  அதிர்ச்சி அடைகிறார் போலீசிற்கு தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீஸ் இதனை கண்டு கொள்ளாமல் எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விடுகிறார் .பின்னர் அந்த ரவுடியின் மகனால் ஒரு பெரிய பிரச்சினையில் அவர்கள் சிக்குவதும், அதை இவர்கள் எப்படி சமாளித்தார்கள்? ரவுடியை என்ன செய்தார்கள்? என்பதே மீதி கதை.

அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி  காதல், நட்பு, சண்டை என்று புது தெம்புடன்  முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக மதுனிகா, வில்லனாக தயாரிப்பாளர் தமிழ்செல்வம், தாதாவாக ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன், விஜய கணேஷ் மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்ய, ரோஷன் ஜோசப்,பரணி பின்னணி இசையை விட பரணி, உமாதேவி, வேலன் பாடல்களை இனிமையாகவும், வரிகள் புரியும்படியும் கொடுத்துள்ளார்.

எடிட்டர்-கேஜே.வெங்கட்ரமணன், கலை-கிருஷ்ணமூர்த்தி கச்சிதம்.

பாலியல் வன்கொடுமை கமர்ஷியலான திரைக்கதையில் முதல் பாதி காதல், ஒட்டம் என்று ஆரம்பித்து பின்பாதியில் பாலியல் குற்றங்கள் மையப்படுத்தி குற்றங்கள் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான தீர்வையையும் வித்தியாசமான இதுவரை வராத கிளைமேக்ஸ் அழுத்தமாக கொடுத்துள்ளார்இயக்குனர் வேலன். அவருடைய முயற்ச்சிக்கு பாராட்டு 

மொத்தத்தில் ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில் மெய்ப்பட செய் பாலியல் குற்றவாளிகளுக்கு சாட்டை அடி கொடுத்திருக்கும் படம். பாராட்டுகள்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்