"நோக்க நோக்க "திரைப்பட விமர்சனம்
"நோக்க நோக்க" திரைப்பட விமர்சனம் :
ஆர் புரொடக்சன்ஸ், ஏவிபி சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் ஆர். முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நோக்க நோக்க.
இதில் அர்ஜூன் சுந்தரம், கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், மணிமேகலை, சுரேஷ் அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- கதை – பத்மினி, வசனம் – சிவசு, ஒளிப்பதிவு – விஜய் முத்துசாமி, இசை – ஆல்டிரின், படத் தொகுப்பு – அரவிந்த், சண்டை-பவர் புஷ்பராஜ், இணை தயாரிப்பு – வெங்கட்ராமன், பி ஆர் ஒ- (PRO) கணேஷ்குமார்.
பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் நேர்மையான நிருபரான ஜோதிராய் இந்தியாவில் பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த நேரத்தில் பணக்காரர்கள் எளிதாக பணமாற்றுதலை செய்ய, ஏழை எளிய மக்கள் வங்கிகளின் வெளியே வரிசையாக வீதியில் நின்று அவதிப்படுவதையும், அதன் பின்னணியில் நடந்த சட்ட விரோத பண மாற்றுதலை. செய்ய அரசியல்வாதி, தொழில் அதிபர் வங்கிகளில் (Bank) மேனேஜரிடம் நெருங்கிய தொடர்புள்ளவர் ஒன்றுகூடி ரகசிய இடத்தில் திட்டம் போடுகிறார்கள் இதை ரகசியமாக தொலைகாட்சி நிருபர் தன் செல்போனில் வீடியோ படம் பிடித்துவிடுகிறார் இதை பார்த்த திட்டம் போடும் கும்பல் அவளையும் அவள் மகளையும் கொலை செய்துவிடுகிறார்கள் தொலைந்து போன செல்போன் வழியே அதைத் தெரிந்து கொண்ட அர்ஜுன் சுந்தரம் குற்றவாளிகளிடம் பேரம் பேசி பல கோடி லஞ்சம் பெற்று காதலியோடு ( சிந்தியா) சுகமாக வாழ்கிறான். அந்த பெண் குழந்தை எப்படி இவர்களையும், கொலை செய்கிறது கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார்? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
அர்ஜூன் சுந்தரம், கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், மணிமேகலை, சுரேஷ் அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர் படத்திற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக நடித்துள்ளனர். உடன் பிஆர்ஒ கணேஷ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது கூடுதல் சிறப்பு.
ஒளிப்பதிவு – விஜய் முத்துசாமி, இசை – ஆல்டிரின், படத் தொகுப்பு – அரவிந்த் ஆகியோர் கதைக்களத்திற்கேற்றவாறு கச்சிதமாக முடித்து கொடுத்துள்ளனர்.
பணமிழப்பு அறிவித்த போது நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதையமைத்து கடவுள் நம்பிக்கையையும், காதலையும் கலந்து கொடுத்திருக்கும் பத்மினியின் கதையும், சிவசுவின் வசனத்துடன் இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.முத்துக்குமார் இன்னும் அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுக்க முயற்சியிருந்தால் சிறப்பாக வெளிவந்திருக்கும். இடையில் கஞ்சா கருப்பு செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களையும் நடுநடுவே நகைச்சுவையாக ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது
மொத்தத்தில் ஆர் புரொடக்சன்ஸ், ஏவிபி சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் நோக்க நோக்க தவறு செய்தவரை சரியான தண்டனை கொடுத்தது பழி தீர்க்க புறப்படும் கதை. வந்த கதைதான் மீண்டும் நினைவு படுத்தி உள்ளது இயக்குனர் முயற்ச்சி பாராட்டுகள்!!