"கூகுள் குட்டப்பா"திரைப்படத்தின் விமர்சனம்

மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற பெயரில் வெளிவந்த படம் தான்  தமிழில்  கூகுள் குட் டப்பா என்ற பெயரில் வெளிவந்துள்ளது இப்பட கதையினை வாங்கி கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வழங்கியுள்ளார்
கதை 
--------
 கிராமத்து விவசாய தந்தை கே எஸ் ரவிக்குமார் தாயில்லாமல் வளர்த்த தன் ஒரே மகனை  பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார் மகனோ ஜெர்மனிக்கு வேலைக்கு செல்கிறான் தந்தையைக் கவனித்துக்கொள்ள ஒரு ரோபோவை கொண்டு வருகிறான் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் ஜெர்மனி சென்று விடுகிறான் அதை  தனது காதலியுடன் சேர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் அந்த ரோபோ பொம்மை  ரவிக்குமாரிடம் நன்றாக பழகி விடுகிறது அவரோ   ரோபோவை பொம்மையாக  கருதாமல் சொந்தப் பிள்ளையாக நினைத்து பழகுகிறார்  இந்த சூழலில் ஜெர்மனியில் பணிபுரியும் தனது நிறுவனத்தின் முதலாளி அந்த ரோபோ ஏற்கனவே ஒரு வீட்டில் ஒருவரை கொலை செய்து விட்டதாக சொல்கிறார் இதனை அறிந்த ரவிக்குமாரின் மகன் ரோபோவிடம் இருந்து தந்தையை காப்பாற்ற தனது காதலியுடன் கிராமத்தில் வருகிறான்  வந்து தனது தந்தையிடம் விவரத்தை சொல்ல அவரோ ரோபோவை தன்னிடமிருந்து மகன் பிடிப்பதாக எண்ணி கவலை கொள்கிறார் அந்த ரோபோவின் உண்மை நிலவரத்தை தந்தைக்கு எடுத்துச் சொல்லி தந்தையின் மனதை மாற்றி அழைத்துச் செல்கிறார் மகன் இதுதான் கதையானாலும் நகைச்சுவை பாசப் போராட்டம் என்று சகல அம்சங்களுடன் இப்படத்தை அழகாக படைத்துள்ளார்கள் இப்படம் நமது உறுப்பினர்களுக்காக சின்னத்திரையை சங்கம் திரையிடப் படுவதாக அறிந்தேன் குழு உறுப்பினர்கள் பார்க்காமல் இருந்தால் இத்திரைப்படத்தை பார்த்து மகிழ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்